(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“ஹ்ம்ம், ஞாபகம் இருக்கு. சேகரனை இன்னும் ஞாபகம் இருக்கா அஹல்யா? ன்னு பிரின்ட் செய்திருந்துச்சு.”

  

“ஓகே. இன்ஸ்பெக்டர் நேத்து உங்க கிட்ட என்னக் கேட்டார்?”

  

“அவரு அதிகமா பேசலை. இன்ஸ்பெக்டர் வந்தப்போ இவரும் இங்கே இருந்தார். இவர் கிட்ட பொதுவா பேசிட்டு, என் கிட்ட பழைய கேஸ் பத்தி விசாரிக்கனும் நாளைக்கு ஸ்டேஷன் வர முடியுமான்னு கேட்டார். நான் சரின்னு சொன்னேன்.”

  

“ஏன்னு நீங்க கேட்கலையா?”

  

“இல்லை. இன்ஸ்பெக்டர் எனக்கு ஹெல்ப் செய்திருக்கார் அவர் தேவை இல்லாம வரச் சொல்ல மாட்டார்ன்னு தெரியும்.”

  

“ஹுஹும் தப்பு அஹல்யா! இன்னொரு தடவை என்ன ஏதுன்னு முழுசா கேட்காம வரேன்னு அக்சப்ட் செய்யாதீங்க.”

  

“சரிங்க!”

  

“அந்த லெட்டர் பத்தி பேசினோமே, யாரு அந்த மாதிரி லெட்டருங்க அனுப்பி இருப்பாங்கன்னு உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா?”

  

“ஹுஹும் இல்லைங்க.”

  

“உங்களை பிடிக்காதவங்க, எதிரிங்க இப்படி யாராவது உங்களுக்கு தெரிஞ்சு இருக்காங்களா?”

  

“சேகரனை இந்த ஊருக்கு வந்தப்புறம் தான் எனக்குத் தெரியும். நானே இந்த ஊருக்கு வந்து அதிக நாள் ஆகலை. அப்படி எதிரின்னு சொல்ற மாதிரி எல்லாம் யார் கூடவும் நான் பழகலை.”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.