அபினவும் அஹல்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிகளால் பேசிக் கொண்டார்கள்.
சக்திக்கு அஹல்யாவின் தற்போதைய மனநிலையும் ஓரளவிற்குப் புரிந்தது. சொந்த ஊரைப் பற்றிய அவளுடைய கேள்வி அஹல்யாவிற்கு சங்கடத்தை கொடுத்திருக்கிறது! ஏன் எனும் கேள்வி எழுந்தாலும், அதை விட்டு விட்டு அந்த நேரத்திற்கு தேவையானதைப் பேசினாள்.
“அஹல்யா, உங்க dilemma எனக்குப் புரியுது. உங்க குழப்பமும் புரியுது. ஆனால் ஒரு எக்ஸ் காப் என்ற முறையில சொல்றேன். ஒரு லாயர் இருக்குறது உங்களுக்கு ரொம்ப அவசியம். உங்களுக்கு பிடிக்காததை அபினவ் இல்லாத நேரத்துல நான் பேச மாட்டேன். கவலைப் படாதீங்க. உங்க மகன் சத்யாவோட இங்கே இருக்கட்டும். நாம இரண்டுப் பேரும் ஸ்டேஷன் போவோம். அபினவ் லாயரோட அங்கே வரட்டும்!”
“சான்ஸே கிடையாது,” என அஹல்யா, அபினவ் இரண்டுப் பேரும் எதுவும் சொல்லும் முன் சொன்னாள் சத்யா.
“என்ன கிடையாது சத்யா?”
“நானும் உங்க கூட வருவேன் சக்தி!” சத்யா அடம் பிடித்தாள்
“நானும் வரேன்!” அருணும் சத்யா சொன்னதையே சொன்னான்.
“ஓகே! இப்போ பேசிட்டு இருக்க டைம் இல்லை. கிளம்பலாம். அபினவ், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் லாயரோட வாங்க,” என சக்தி சொல்லவும், அது தான் சரி என்று முடிவு செய்து அனைவரும் கிளம்பினார்கள்.
அபினவ் தன்னுடைய பைக்கில் வக்கீலை அழைத்து வரச் சென்றான். சக்தியுடைய ஜீப்பில் சத்யா, அஹல்யா, அருண் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி பயணமானார்கள்.
🌼🌸❀✿🌷