(Reading time: 34 - 67 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

தொடர்கதை - இன்று நீ நாளை நான் - 07 - சசிரேகா

தூக்கம் வேறு கொம்பனை பாடாய் படுத்த வேறு வழியின்றி வீட்டின் ஹாலில் படுத்து உறங்கலானான், சண்முகமோ அவனது நிலைமையைக்கண்டு பரிதாபப்பட்டு அவனுக்கு தலையனை தந்தார், காவேரியும் பலவித யோசனைக்குப்பின் கொம்பன் என்ன செய்கிறான் என பார்க்க வெளியே வந்தாள், அங்கு உறங்கிக் கொண்டிருப்பவனைக்கண்டு பரிதாபப்பட்டாள், சரி அவன் உறங்கட்டும் என விட்டுவிட்டாள். அவனும் நன்றாக உறங்கினான் எவ்வளவு நேரம் தூங்கினானோ சில மணி நேரம் கழித்தே கண்விழித்தான், அவனுக்கு அருகில் கணக்குபிள்ளை படுத்து தூங்கிக் கொண்டிருக்க அவனை எழுப்பினான் கொம்பன், அவனும் உறக்கம் கலைந்து எழுந்தான்

  

”நல்ல தூக்கம் கொம்பா”

  

”ஆமா எப்ப வந்து படுத்த உன்னை தேடினேன் ஆளே இல்லை எங்க போயிருந்த”

  

”நான் போய் எங்க போவேன் நாயை கட்டியே வைச்சிருந்தியா பாவமா இருந்தது சரி அதுக்கு சோறு போட்டு அப்படியே வாக்கிங் கூட்டிட்டுப் போய் வந்தேன்”

  

”ப்ச் ஆமாம்டா இதை நான் செய்யனும் மறந்துட்டேன்“

  

”விடு நண்பா, உனக்கு ஒரு பிரச்சனையா ரெண்டு பிரச்சனையா ஏகப்பட்ட பிரச்சனை இதுல இந்த சின்ன விசயம்லாம் உனக்கு எங்க ஞாபகத்துல இருக்கப் போகுது, அதான் நான் இருக்கேன்ல நான் பார்த்துக்கறேன் போதுமா”

  

”என்னவோ நல்லா தூங்கியாச்சி இப்பதான் மனசு தெளிவா இருக்கு“

  

“அது போகட்டும் உனக்குன்னு ரூம் இருக்கறப்ப நீ ஏன் இங்க வந்து படுத்திருக்க”

  

”அது ஒரு கதை”

  

”கதையா என்னாச்சி மறுபடியும் உன் முறைப்பொண்ணோட மோதலா”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.