”அவர் பொண்டாட்டியைதான் அப்படி சொல்றாரு நம்ம கொம்பன் கட்டிக்கிட்டது அவரோட முறைப்பொண்ணைதானே“
”யாரை சொல்ற ஓ சண்முகத்தோட பொண்ணையா“
”ஆமாம்“
“நல்ல பொண்ணுப்பா, பாவம் எத்தனை முறை அவளுக்கு ஏற்பாடு செய்த கல்யாணம் நின்னுப் போச்சி தெரியுமா”
”அதெல்லாம் எங்களுக்கும் தெரியும் நீங்க பொருளை கொடுங்க போதும்”
”இதோ இப்பவே தரேன்” என சொல்லியவர் அவரே எழுந்து பொருளை எடுத்து அதை பேப்பரில் வைத்து சுருட்டி ப்ளாஸ்டிக் கவரில் அடைத்துவிட்டு ஒரு நொடி பலமாக யோசித்து பின் என்ன நினைத்தாரோ வேறு ஒரு பொருளையும் எடுத்து அதே கவரில் வைத்துக் கொண்டு வந்து நின்றார்
”இந்தாப்பா வாங்கிக்க”
”எவ்ளோ ஆச்சி”
”பணம்லாம் வேணாம்பா நீ செஞ்ச உதவியே பெரிசு உன்கிட்ட பணம் வாங்கினா நல்லாயிருக்காது”
”சும்மா கிடைக்கற பொருள் இந்த கொம்பனுக்கு பிடிக்காது நீங்களே வைச்சிக்குங்க” என்றான் கொம்பன்
“அட இருப்பா உன்கிட்ட நல்லகுணம் நிறையவே இருக்கு”