எதுவும் நடக்கலை, எந்த இடத்திலயும் எங்க மானம் போகலை ராஜமரியாதைதான் கிடைச்சது” என சொல்ல அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.
அவர்கள் தந்த பொருளை வாங்கி சரிபார்த்தாள் அனைத்தும் ப்ராண்டட் விலை அதிகமானது அதைக்கண்டு
”பரவாயில்லையே ப்ராண்டட் துணிகளைதான் வாங்கியிருக்கீங்க விலை அதிகமாச்சே எப்படி”
”எவ்ளோ விலையா இருந்தா என்ன வாங்கிட்டோம்ல அதைபாரு”
என சொல்ல அவளும் அவனை பெருமையாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் பொருளை சரிபார்த்தாள். அவள் பார்த்த பார்வைக்கே கொம்பன் மகுடம் சூட்டப்பட்ட ராஜா போல கம்பீரமாக நிற்க கணக்குப்பிள்ளையோ சூப்பர் என புகழ்ந்தான்.
காவேரியோ அலறினாள்
”யோவ் என்னய்யா இது” என கோபமாக கத்த அவர்கள் திடுக்கிட்டார்கள்
”என்னாச்சி”
”உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா இதை கூட வாங்கிட்டு வந்திருப்ப என்ன நினைச்ச நீ என்பை்பத்தி”
“உன்னைப்பத்தி நான் ஒண்ணுமே நினைக்கலை”
“நினைக்காமதான் இதை வாங்கிட்டு வந்தியா“
”ஏய் நீ கொடுத்த லிஸ்ட்ல இருக்கற பொருளைதானே வாங்கினேன்”
”நான் இதை லிஸ்ட்ல எழுதுல, கொழுப்பெடுத்து போய் நீ வாங்கிட்டு வந்திருக்க எவ்ளோ