கெட்ட புத்தி உனக்கு கெட்ட எண்ணத்தோட என் பக்கம் வந்த கழுத்தை வெட்டிடுவேன், உன்னைப் போய் நம்பி என் ரூம்ல தங்க வைச்சேனே என்னை சொல்லனும், இனி உன்னை நான் ஒருகாலும் நம்ப மாட்டேன், ஹால்லயே படுத்துக்க தவறி போய் என் ரூமுக்கு வந்த உன் முகத்தில ஆசிட் ஊத்திடுவேன், இந்தா இதை நீயே வைச்சி பூஜை பண்ணிக்க பிடி” என திட்டிவிடடு அவனிடம் அந்த பொருளை தந்துவிட்டு கோபமாக தன் அறைக்குச் சென்று சத்தமாக கதவை சாத்திக் கொண்டாள்.
அவள் சென்றதும் கொம்பனோ குழம்பி கணக்குப்பிள்ளையை பார்த்து
”என்னடா நடக்குது இங்க இவள் எதுக்கு பேய் பிடிச்சவ மாதிரி ஆடிட்டு போறா நாம எல்லாம் சரியாதானே செய்தோம்”
”அதானே எங்கயோ தப்பு நடந்திருக்கு கொம்பா முதல்ல அது என்ன பொருள்ன்னு பாரு” என சொல்ல கொம்பனும் பார்த்து அதிர்ந்தான் கணக்குப்பிள்ளையும் பார்த்து நெளிந்தான்.
”என்ன கொம்பா நீ இதையெல்லாமா வாங்குவ”
”அடிவாங்குவ நீயும்தானே அங்க இருந்த நானாடா இதை வாங்கினேன்”
”ஆமாம்ல நீயும் வாங்கலை நானும் சொல்லலை பின்ன இது எப்படி”
“அந்த மெடிக்கல் ஷாப்காரன் செஞ்ச வேலை”
”இந்த ஊர்க்காரங்க தொல்லை தாங்க முடியலை, அவங்களுக்கு நீ நல்லது செய்ததுக்காக உனக்கு நல்லது செய்றேன்னு என்னத்த செஞ்சி வைச்சிருக்கானுங்க பாரு”
”சே ஏதோ ரூம்ல படுக்க இடமாவது கிடைச்சது, இப்ப அதுவும் இல்லாம போச்சி நான் மட்டும் ஹால்ல படுத்து தூங்கற விசயம் என் வீட்டுக்கு தெரிஞ்சா என்னாகிறது பாவம் அவங்க கஷ்டப்படுவாங்களே”
”உனக்கு மட்டும் ஏன் அடுத்தடுத்து கஷ்டங்களா வருதோ நண்பா பாவம்பா நீ“