தூக்க கலக்கத்தில் கூட அவள் தேவதை போல இருப்பதாக நினைத்து அவளின் அழகை ரசித்தான் கொம்பன். காபி குடித்து தூக்கம் நன்றாக கலைந்தபின் கொம்பனை கவனித்தாள் அவனது பார்வை சென்ற இடத்தையும் கண்டு கொதித்துப் போய் சட்டென கதவை சாத்தினாள் அதில் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது
”இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை ம் காலையிலேயே திவ்ய தரிசனம் பார்த்தாச்சி இன்னிக்கு இது போதும்” என சொல்லிக் கொண்டே குளிக்கச் சென்றான்.
குளித்து முடித்து வரவும் கணக்குபிள்ளை தயாராக இருந்தான்
”என்னப்பா கொம்பா பயங்கர சுறுசுறுப்பா இருக்க போல என்னாச்சி நல்ல கனவு கண்டியா”
”கனவு என்னடா கனவு நிஜத்திலயே திவ்ய தரிசனம் கிடைச்சது“
”அப்படியா எங்க”
”என் முறைபொண்ணுகிட்ட”
”ம்க்கும் யாரு அவள்கிட்டயா அட போ கொம்பா”
”நிசம்டா”
”சரி விடு ஆமா என்ன இவ்ளோ சீக்கிரமா ரெடியாகிட்ட என்ன விசயம்”
”சீக்கிரமா சாப்பிட்டு கிளம்பலாம்”
“எங்க கிளம்பறது”
”என் மாமனார் சொத்தை நான்தானே பார்த்துக்கனும் அதுக்கு போகனும்ல”