வரவும் இவ்விருவருக்கும் அலுப்பே வந்தது உச் கொட்ட அவளோ வியந்தாள்
”என்ன ரொம்ப அலுத்துக்கறீங்க”
”என்ன வேணும் உனக்கு காபியா” என கொம்பன் கேட்க
”இல்லை”
”வேற”
”கடைக்குப் போய் சில பொருட்களை வாங்கிட்டு வா அவசியம் எனக்குத் தேவை” என சொல்ல அவனோ சலிப்புடன்
”ப்ச் என்ன வாங்கனும்”
”எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு எழுதியிருக்கேன் கூடவே பணமும் இருக்கு இந்தா” என நீட்ட அவனோ லிஸ்ட் மட்டும் வாங்கிக் கொண்டான்
”பணம் வேணாமா”
”ப்ச் என்கிட்ட பணம் இருக்கு”
”எப்படி”
”ஏன்டி கட்டின பொண்டாட்டிக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க முடியாத அளவுக்கு வக்கில்லாதவன் இல்லை நானு, பேங்க்ல பணம் போட்டு வைச்சிருக்கேன் உனக்கென்ன பொருள்தானே வேணும் நான் வாங்கிட்டு வரேன்”
”ஓகே எனக்கு பணம் லாபம் அப்புறம் லிஸ்ட்ல இருக்கற பொருள் ஒண்ணுகூட மிஸ் ஆகாம வாங்கிட்டு வரனும், எல்லாமே ரொம்ப அவசியமானது, வேணும்னே என் மேல