(Reading time: 34 - 67 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

இருக்கற வெறுப்புல எதையாவது விட்டுட்டு வந்தீங்க நைட் வீட்டுக்குள்ள படுக்க முடியாது வீதியிலதான் படுக்கனும்” என சொல்லிவிட்டு பணத்துடன் உள்ளே செல்ல அவளை வெறுப்பாக பார்த்த கொம்பனோ கணக்குபிள்ளையிடம்

  

”வா பேங்க்குக்கு போயிட்டு பணம் எடுத்துக்கிட்டு கடைக்குப் போய் வரலாம் எழு”

  

”இருப்பா ஏதாவது சாப்பிட்டுப் போகலாம் பசிக்குது”

  

”இந்த வீட்லயா வேணாம் வா நாம வெளிய போய் பிரியாணி சாப்பிடலாம்”

  

”ஆஹா சூப்பர்” என சொல்லி உற்சாகமாக எழ கொம்பனும் சிரித்த முகத்துடன் கிளம்பினான். அவர்கள் மகிழ்ச்சியாக செல்வதைக்கண்டு நக்கலாக சிரித்தாள் காவேரி

  

நேராக இருவரும் பேங்க்குக்குச் சென்றார்கள்

  

”கொம்பா எவ்ளோ பணம் எடுக்கலாம்”

  

”லிஸ்ட்லாம் கொடுத்திருக்கா எப்படியும் பணம் நிறைய செலவாகும் எதுக்கும் ஒரு ஐம்பதாயிரம் எடுத்துக்கலாமா”

  

”என்னத்த லிஸ்ட்ல இருக்கப் போகுது மளிகை சாமானோ காய்கறி சாமானோதான் இருக்கும் இதுக்கு எதுக்கு ஐம்பதாயிரம்”

  

”அப்போ எவ்ளோ எடுக்கலாம்ங்கற”

  

”ம் ஒரு பத்தாயிரம் எடுக்கலாம்”

  

”இருடா நம்ம செலவுக்கும் வேணும்ல அடிக்கடி என்ன பேங்குக்கா வரமுடியும் இல்லை என் மாமனார்கிட்டயா போய் நிக்க முடியும்”

  

”நீ சொல்றதும் சரிதான் நண்பா, சரி நீ சொன்ன மாதிரியே ஐம்பதாயிரம் எடு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.