அவனோ அந்த லிஸ்ட்டை வாங்கி குழம்பியபடியே கடையை விட்டு வெளியேறினான் கணக்குப்பிள்ளையோ
”என்ன கொம்பா இந்த கடையில விக்காதாமே அப்படி என்ன பொருள் வாங்க சொல்லியிருப்பாங்க”
”நாம தப்பு பண்ணிட்டோம் முதல்ல லிஸ்ட்ல என்ன இருக்குன்னு பார்த்திருக்கனும்”
”ஆமாம்ல சரி கொடு என்ன ஏதுன்னு பார்க்கலாம்“
”இந்தா படிச்சிக் காட்டு எதைதான் வாங்க சொல்லியிருக்காள்ன்னு தெரிஞ்சிக்கலாம்” என கொம்பன் சொல்ல அவனும் அந்த லிஸ்ட்டை வாங்கி சிறிதும் யோசிக்காமல் கடகடவென படிக்கலானான்.
”ஒண்ணாவது பிரா சைஸ் 34 3 செட் வாங்கனும் கலர் கருப்பு சிவப்பு வெளுப்பு இரண்டாவது ஜட்டி சைஸ் 100 4 வாங்கனும் மூணாவது ஜாக்கெட் பிட் 7 வாங்கனும் நிறங்கள் சிவப்பு கருப்பு வெளுப்பு பச்சை மஞ்சள் நீலம் ஆரஞ்சு நாலாவது விஸ்பர் வாங்கனும் 1 பேக்கெட் ஐஞ்சாவது இதென்ன ஒண்ணும் விளங்கலையே ஆஆ காஜல் கண்ணுக்கு போடறது 1 வாங்கனும் அடுத்து கொம்பா இது என்னன்னே எனக்கு புரியலை நீ கொஞ்சம் பார்த்து சொல்லுப்பா” என நீட்ட அவனோ எரிமலை போல கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
”கொம்பா என்னாச்சிப்பா ஏன் இப்படி பொங்கற”
”என்னடா லிஸ்ட் இது, இதையாடா நம்மளை வாங்கிட்டு வர சொன்னா” என கேட்க அதன்பின்தான் அவனுக்கே புரிந்தது
”அட ஆமாம்ல இதெப்படிப்பா நாம வாங்கறது”
”வேணும்னே நம்மளை வாங்கிட்டு வர சொல்றா, இதை வாங்க கடைக்குப் போனா நம்ம மானம்தான் போகும், தெரிஞ்சே என்னென்ன செய்றாள் பாருடா அவளை”