(Reading time: 34 - 67 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”கொம்பா என்னப்பா வந்ததும் உடனே கிளம்பிட்ட வாப்பா உட்காரு ஜூஸ் வரவழைக்கிறேன் குடிப்ப”

  

“அதெல்லாம் வேணாம்” என சொல்லி முடிக்கும் முன்பே கணக்குப்பிள்ளையோ

  

”ஆப்பிள் ஜுஸ் 2” என்றான் அதைக்கேட்டதும் கொம்பன் கணக்குப்பிள்ளையை முறைக்க அவனோ

  

”பசிக்குதுப்பா வர்ற அவசரத்தில சாப்பிடகூட இல்லை“

  

”அதான் பிரியாணி வாங்கித்தரேன்னு சொன்னேன்ல அப்புறம் என்ன”

  

”நீயே கோபத்தில இருக்க எங்க நீ பிரியாணி வாங்கித்தருவ அதான் ஜூஸ் குடிக்கலாம்னு ஆசைப்பட்டேன்”

  

“அலையாதடா எனக்கும்தான் பசிக்குது நாம இன்னிக்கு பிரியாணி சாப்பிடறோம் சரியா”

  

“அப்படியாப்பா சரிப்பா சரிப்பா” என இவர்கள் பேசி முடிக்க ஜுஸ் வர சரியாக இருந்தது இருவரும் அந்த ஜுஸ் பருகினார்கள். முதலாளியோ

  

”சொல்லு கொம்பா என்ன துணி வேணும், நீ அலைய வேணாம் நீ இருக்கற இடத்திலயே எல்லாத்தையும் வரவழைக்கிறேன் சொல்லுப்பா” என சொல்ல அவனோ திணறினான்

  

”அது வந்து எப்படி சொல்றதுன்னா” என இழுக்க

  

”தயக்கம் எதுக்கு கொம்பா, இது உன்னோட கடை உன் விருப்பம் போல எதை வேணும்னாலும் எடுத்துக்க காசு கூட தரவேணாம்பா”

  

”சே சே அப்படியெல்லாம் இல்லை காசெல்லாம் கொண்டு வந்திருக்கேன்“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.