(Reading time: 7 - 14 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“சேகரன் சாகுறதுக்கு முன்னாடி அவன் மொபைல்ல இருந்து கடைசியா போன கால் உங்க நம்பருக்கு தான்.”

  

“நான் அதை அட்டென்ட் செய்யலை சார். எனக்கு அதைப் பத்தி எதுவும் தெரியாது.”

  

“நாங்க மொபைல் ரெகார்ட்ஸும் ட்ராக் செய்துட்டோம். உங்க வீடு பக்கத்துல இருக்க டவர்ல இருந்து தான் அந்த கால் போயிருக்கு. ஸோ, உங்க வீடு முன்னாடி இருந்து தான் அவன் கால் செய்திருக்கனும்.”

  

“எனக்கு அதெல்லாம் தெரியலை சார்”

  

“உங்களுக்கு வந்த மாதிரியே இன்னும் சில பேருக்கு மொட்டைக் கடிதாசி வந்திருந்தது அஹல்யா. டாக்டர் பிரசாத் அப்புறம் உங்க எதிர் வீட்டுல இருக்க சவீதாக்கும் வந்திருந்துச்சு. டாக்டர் கிட்ட அந்த லெட்டரை வாங்கினப்போ அவர் சேகரன் அவரோட ஹாஸ்பிட்டல்ல டெம்ப்ரரி வொர்க்கரா வேலை செய்ததா சொன்னார். அது எங்க பழைய விசாரணையிலேயே எங்களுக்கு தெரிஞ்ச விஷயம் தான். ஆனால், ரிசன்ட்டா ஹாஸ்பிட்டலை கிளீன் செய்தப்போ சேகரனோட பேக் ஒன்னு கிடைச்சதா ஹவுஸ் கீப்பிங் டீம் சொன்னதா சொன்னார். ஹாஸ்பிட்டல் கிளீன் செய்ற டீம் கிட்ட இருந்து அந்த பேகை வாங்கி நாங்க பார்த்தப்போ அதுக்குள்ளே இதெல்லாம் இருந்துச்சு.” தென்றல்வாணன் அவன் முன் இருந்த ஃபைலில் இருந்து சில போட்டோக்களை அஹல்யாவின் முன் பரப்பி வைத்தான்.

  

ஒவ்வொரு போட்டோவிலும் சேகரனும், அஹல்யாவும் இருந்தார்கள். பெரும்பாலான போட்டோக்களில் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அருணோ வேறு யாரோ எதிலும் இல்லை.

  

“இதைப் பத்தி என்ன சொல்றீங்க அஹல்யா?”

  

“எனக்குத் தெரியாது இன்ஸ்பெக்டர். சேகரன் அருண் கூட விளையாடுவான். அப்போ சில சமயம் செல்ஃபி எடுத்திருக்கான். அப்படி எடுத்ததா இருக்கலாம்.”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.