(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

விஷயம் இப்போதே அவங்களுக்கு தெரிஞ்சதும் நல்லது தான்.”

  

“...”

  

நீங்க இரண்டுப் பேரும் பேசுறது இல்லை போல இருக்கே?”

  

“...”

  

அவங்க பெரியவங்க... நம்ம அம்மா போலன்னு நினைச்சுக்கனும்... நாம கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடந்தா தப்பு இல்லை... அவங்க பக்கம் இருந்து யோசிச்சு பாரேன், உனக்கு நான் சொல்றது புரியும்.”

  

“...”

  

இப்படி அமைதியா இருந்தால் எப்படி பாரதி? நீயே போய் அத்தைக் கிட்டப் பேசு, அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்...”

  

சரி!”

  

பாரதியின் ஒரு வார்த்தை பதிலை கவனித்து,

  

கோபமா பாரதி? அத்தையைப் பத்தி தெரிஞ்சதால தான் சொல்றேன்... அவங்களுக்கு மனசுக்குள் நம்ம மேல் கொஞ்சம் பயம், எங்கே பசங்களை அவங்க கிட்ட இருந்து பிரிச்சிடுவோமோன்னு பயம்... இந்த வீட்டில நடப்பதை கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா உனக்கே புரியும். மாமா முதல் எல்லோரும் அவங்க மனசு கோணாமல் தான் நடப்பாங்க. அதனால் தான் இப்படின்னு நினைக்கிறேன்...”

  

உமாவின் பேச்சில் இருந்த பின்பகுதியை மொத்தமாக புறக்கணித்து,

   

எனக்கு கோபம் எல்லாம் இல்லை உமா. ஆச்சர்யம் தான்!” என்றாள் பாரதி!

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.