(Reading time: 18 - 35 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”தங்கமான மனசுங்க அவனுக்கு”

  

”மூர்த்தியை சந்திச்சது அவன்கிட்ட பேசினது எல்லாத்தையும் நான் வேங்கையன்கிட்ட சொன்னேன், அவனே முதல்ல நம்பலை, நம்ம மூர்த்தியா இப்படின்னு ஆச்சர்யப்பட்டான், அப்ப கூட ஜானகியை நினைச்சிதான் வருத்தப்பட்டானே தவிர, அவன் வாழ்க்கையை பத்தி அவன் கொஞ்சம் கூட யோசிக்கலை, நான் வேணா மூர்த்திகிட்ட பேசி அவன் மனசை மாத்தி ஜானகியை ஏத்துக்க வைக்கிறேன்னு சொன்னான், நான் சொன்னேன் மூர்த்தி மாறிட்டான், அவனை உன்னாலகூட மாத்த முடியாது, அதை விட ஜானகியோட மனசை மாத்திப்பாரு, அவள் மனசு மாறி உன்னை ஏத்துக்குவாள்ன்னு சொன்னேன், அதுக்கு அவன் சொன்னான் அப்படி ஒண்ணு நடந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் ஆனா, இல்லையே அவளுக்கு என்னை பிடிக்கும்னு நான் நினைச்சேன் ஆனா, அவளுக்கு மூர்த்தியைதான் பிடிச்சிருக்கு, அது தெரிஞ்ச பின்னாடி என்னால என்ன செய்ய முடியும், என்னால அவள் வாழ்க்கை நாசமாக கூடாது, அது பாவம் தெரிஞ்சே நான் பாவியாக விரும்பலை மாமான்னு சொன்னான், அதுசரிப்பா அவளை நினைச்சிக்கிட்டு நீ வாழறது எனக்குப் பிடிக்கலை, கண்டிப்பா நீ வேற ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் செய்துக்கனும்னு சொன்னா, அதுக்கு அவன் சொல்றான் ஒருத்தனுக்கு ஒருத்திங்கறதுதான் நம்மோட பண்பாடு, நான் ஏற்கனவே கல்யாணமானவன், அப்படியே எங்களுக்குள்ள பிரிவு வந்து அவள் என்னை விட்டு போனாலும் சரி, இன்னொருத்தியை நான் நினைக்க மாட்டேன்னு சொன்னான், அதுக்கு நான் சொன்னேன் ஏன்பா என் பொண்ணு மட்டும் மூர்த்தியை ஏத்துக்கனும்னு சொல்றியே, அது மட்டும் பண்பாடான்னு கேட்டா

  

 அதுக்கு அவன் சொல்றான் பண்பாடு இல்லைதான் அதுக்காக விருப்பமில்லாத பொண்ணை சொந்தமாக்க நினைக்கறது பாவம், ஏற்கனவே அவளை நான் கல்யாணம் செய்து அவளோட வயித்தெரிச்சலை கொட்டிக்கிட்டேன், அவளுக்கு என்னை பிடிக்கலைங்கற விசயம் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா கூட நான் கல்யாணத்தை ஏற்பாடு செய்திருக்க மாட்டேன், ஊரைக் கூட்டி தடல்புடலா காசை தண்ணியா செலவு செய்து கல்யாணத்தை நடத்தி அவளாட வாழலாம்னு நினைக்கறப்ப அவளோட விருப்பத்தை சொன்னா, அதுக்கு மேல அவளோட வாழற உரிமையை நான் இழந்துட்டேன், அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்னு விட்டு விலகினேன்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.