வைப்பீங்க, அதை வேற நான் கேட்டு தொலைக்கனுமா எனக்கு நேரமாச்சி நான் கிளம்பறேன்” என சொல்லி கிளம்ப முயன்றவளை தடுத்தான் வேங்கையன்
”பொறு நான் சொல்றதை கேளு”
”முடியாது” என சொல்ல வேங்கையன் தன் தாயை பார்த்து கண்ஜாடை செய்ய உடனே மங்களமோ
”மருமகளே டிபன் சாப்பிட்டு போம்மா, உனக்கு பிடிச்சதை செய்து வைச்சிருக்கேன் ஊர் சுத்திப்பார்க்கறதுக்கு தெம்பு வேணாமா வாம்மா”
”சே எத்தனை முறை சொல்றது என்னை மருமகளேன்னு கூப்பிடாதீங்கன்னு, கோர்ட் வரைக்கும் போய் வந்ததை மறந்துட்டீங்களா என்ன“
”உறவு முறையில நீ எனக்கு மருமகள்தானே, நீ என் பையன் கூட வாழ்ந்தாலும் சரி வாழலைன்னாலும் சரி, நான் உன்னை அப்படித்தான் கூப்பிடுவேன் மருமகளே” என சொல்ல அவளோ எரிந்து விழுந்தாள்
”போதும் இப்படி அக்கறையா பேசி என் மனசை மாத்தனும்னு நினைக்காதீங்க, என் மனசுல எப்பவுமே மூர்த்தி மாமாதான் இருக்காரு” என சொல்ல மங்களத்தின் முகம் வாடியது.
வேங்கையனோ வாசலையே பார்த்தபடி இருந்தான். ஜானகியோ கிளம்பி செல்வதைக்கண்டு பதறினான்
”இரு இரு நான் சொல்றதைக் கேளு”
”ஏன்தான் இப்படி என் உசுரை எடுக்கறீங்க”
”இல்லை நான் என்ன சொல்ல வரேன்னா”
”சொல்லித் தொலைங்க” என்றாள் கடுப்பாக அவனோ திணறினான்