என்னை விட்டுட்டு அவள் மூர்த்தியை கல்யாணம் செய்துக்கிட்டாலும் நான் சந்தோஷப்படுவேனே தவிர, வருத்தப்பட மாட்டேன், என்னைப் பொருத்தவரைக்கும் என் முறைப்பொண்ணு சந்தோஷமா இருக்கனும், என்னால அவளை சந்தோஷமா வச்சிக்க முடியலைன்னாலும் மத்தவங்களால அவள் சந்தோஷமா இருந்தா அதுவே போதும்னு முடிவு பண்ணிட்டேன், கோர்ட் எங்களுக்கு 6 மாசம் அவகாசம் தந்தது, அது அவளுக்கு சுத்தமா பிடிக்கலை, இருந்த 6 மாசத்திலயே அவள் மனசு மாறலை, இனிமேலயா மாற போகுதுன்னு சொன்னான், அதுக்கு நான் சொன்னேன் ஒருவேளை அவள் மனசு மாறினா நீ என்னப்பா செய்வ, அவளே உன்னை தேடி வந்தா, அவளை நீ ஏத்துக்குவியான்னு கேட்டா கண்டிப்பா ஏத்துக்குவேன், அவள் மனசுல நான் இருக்கேன்னு அவள் சொல்லட்டும் மகாராணி போல அவளை நான் வாழவைப்பேன்னு உறுதியா சொன்னான், இதுக்கு மேல எனக்கு பேச எதுவும் இல்லை, அப்படியே திரும்பி மஹதியை பார்த்தேன், அவள் அவசரமா வாங்க வாங்கன்னு சைகை செய்து கூப்பிடவும் உடனே வேங்கையன்கிட்ட சொல்லிவிட்டு மஹதிகிட்ட போனேன்
அப்பதான் மஹதி புதுசா ஒரு திட்டத்தை சொன்னா, அது எனக்கு பிடிச்சிருந்தது, இதுக்கு வேங்கையனும் உதவி செய்யனும்னு கேட்டுக்கிட்டா, அதைபத்தி நான் வேங்கையன்கிட்ட போய் பேசினா முதல்ல அவன் ஒத்துக்கலை, முடியாதுன்னான் ஆனா, நான் விடலை, ஜானகிக்கு என்ன அவள் டக்குன்னு மூர்த்திகிட்ட போயிடுவா, அப்புறம் உன் வாழ்க்கை கேள்விகுறியாகறதை நான் எப்படி பார்க்கறது, நீ தியாகியாட்டும் தனியா வாழ்ந்துக்குவ ஆனா, என்னால குற்ற உணர்ச்சியோட வாழ முடியாது, அதனால இந்த திட்டத்துக்கு நீ கட்டுப்பட்டுதான் ஆகனும்னு, தீர்த்துப் பேசிட்டேன், அப்பவும் அவன் இல்லை வேணாம் பிரச்சனை வரும் அது இதுன்னு சொன்னான், நான் விடலையே ஜானகியை எப்படியோ விட்டாச்சி, வேங்கையனையாவது பிடிச்சி வைக்கனும்னு நினைச்சி பேசினேன், எனக்காக செய்ன்னு சொன்னேன், அவனுக்கு விருப்பமேயில்லை, வேற வழியில்லாம எனக்காக ஒத்துக்கிட்டான் அது போதுமே, நாளைக்கு மஹதின்னு ஒரு பொண்ணு வருவா, அவள் என்ன சொன்னாலும் சரி அப்படியே நீ நடந்துக்கனும், இதுக்கு உன் அப்பா அம்மாவையும் துணைக்கு வைச்சிக்கன்னு சொன்னேன்”
”அய்யோ என்னங்க இப்படி சொல்றீங்க, வேங்கையனோட அப்பா அம்மாவா அவங்க வழிக்கு வருவாங்களா”