”பையன் வாழ்க்கை முக்கியம்னு நினைச்சா கண்டிப்பா வருவாங்க, நாம என்ன அவன் வாழ்க்கையை கெடுக்கவா பார்க்கிறோம், இல்லையே, வேங்கையன்கூட ஜானகியை சேர்த்து வைக்கிறோம்னு தானே சொன்னோம், கண்டிப்பா அவங்க ஒத்துப்பாங்க, அந்த வேலையை நான் வேங்கையன்கிட்டயே கொடுத்துட்டேன், முதல்ல அவன் பயந்தான், அப்பாவா அம்மாவான்னு அச்சப்பட்டான், அப்புறம் நான் மஹதியை பார்த்தேன் அவளோ அழறமாதிரி நடிங்கன்னு சைகை காட்டினா, உடனே ஒரு நடிப்பு நடிச்சேன் பாரு, அதுல வேங்கையன் விழுந்துட்டான், எப்படியோ ஒரு தீர்வு கிடைக்க போகுதுங்கற சந்தோஷத்துல மஹதியை கூட்டிக்கிட்டு வீடு வந்து சேர்ந்தேன்“
”எங்கிருந்தோ வந்த மஹதிக்கு வேங்கையனோட மதிப்பு தெரியுது, இவளுக்கு தெரியுதான்னு பாருங்க”
”என்ன செய்றது வேங்கையனை சின்னப்பல இருந்து பார்த்ததாலயும் அவனோட கரடுமுரடான குணத்தை பார்த்து அவளுக்கு பிடிக்கலை, மூர்த்தி போல நைஸா பேசி புதைகுழியில தள்ளறவனைதான் அவள் நம்பினா என்ன செய்றது விடு”
”ஆக நாளைக்கு வேங்கையன் வீட்ல பெரிய சம்பவம் நடக்கப் போகுதுன்னு சொல்லுங்க”
”சம்பவம்தான் நடக்கப் போகுது ஆனா, அதுல பாதிக்கப்படப்போறது யாருன்னுதான் தெரியலை”
”ஏங்க நம்ம பொண்ணுக்காக பாவம் மஹதியை இந்த பிரச்சனையில சிக்க வைக்கலாமா இது தப்புங்க”
”இதைபத்தி நான் அவள்கிட்ட பேசிட்டேன், அதுக்கு மஹதி சொல்றா என் உயிர்தோழி பிரச்சனையில இருக்கறப்ப, அதை தீர்க்கிற வழியிருந்தும் ஒதுங்கி நின்னா அது என் நட்புக்கே களங்கம், என்னால முடிஞ்சதை செய்றேன் இதனால எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, எல்லா பிரச்சனை முடிஞ்சதும் நான் கிளம்பி போயிடுவேன்னு சொன்னா”
”எந்த ஜென்மத்தில நாம புண்ணியம் செய்தோமோ மஹதி போல ஒருத்தி நமக்கு உதவ வந்திருக்கா, அவளோட முயற்சியாவது வீணாகாம இருக்கனும்ங்க”