(Reading time: 18 - 35 minutes)
Chinna marumagal
Chinna marumagal

வீரசிங்கம் வீட்டு சின்ன மருமகள் என சொல்லிக் கொண்டே செல்ல மஹதி அலறினாள்

  

”அங்கிள் என்ன செய்றீங்க, ஊர் மக்களுக்கு எதுக்கு இதை சொல்லனும்”

  

”ஷ்ஷ் நாம நடிக்க ஆரம்பிச்சிட்டோம், முதல்ல ஊரை நம்ப வைச்சிட்டா ஜானகியும் நம்பிடுவா, நீ பேசாம இரு, நாங்க இருக்கோம்ல அமைதியா அடக்க ஒடுக்கமா நடந்து வா” என சொல்ல அவளும் நடப்பது தனக்கு சாதகமாகுமா பாதகமாகுமா என நினைத்து அச்சத்துடனே நடந்து வந்தாள்.

  

மறுபக்கம் ஜானகியோ விரைவாக தன்னை தயார் படுத்திக் கொண்டு மஹதிக்கு மூர்த்தியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் தன்னை அழகாக அலங்காரம் செய்துக் கொண்டு வெளியே வர எதிர்பட்டார் வேங்கையனின் தாய் மங்களம்

  

”மருமகளே எங்கம்மா கிளம்பிட்ட“ என்றுதான் இயல்பாக கேட்டார் அதற்கே ஜானகி கோபத்தில் பொங்கினாள்

  

”நான் என்ன சின்ன குழந்தையா, எங்கப் போனாலும் சொல்லிட்டு போறதுக்கு, நான் என்ன தொலைஞ்சா போயிடப்போறேன், எப்ப பாரு கண்கொத்தி பாம்பா நான் என்ன செய்றேன் ஏது செய்றேன்னு பார்க்கறதே வேலையா போச்சி உங்களுக்கு, சே வரவர இந்த வீட்ல இருக்கறது ஏதோ நரகத்தில இருக்கற மாதிரியிருக்கு” என அவள் சத்தம் போட அதைக்கேட்டபடி வந்த வேங்கையனோ

  

”ஆரம்பிச்சிட்டீங்களா வீட்ல கூச்சல் வேணாம்னு எத்தனை முறை சொல்றது” என சத்தம் போட அதைக்கேட்ட ஜானகியோ

  

”நான் ஒண்ணும் கூச்சல் போடலை உங்கம்மாதான் என்னை நிக்க வைச்சி கேள்வியா கேட்கறாங்க, என்னை கேள்வி கேட்க அவங்க யாரு”

  

என கேட்க அவனோ தன் தாயைப் பார்த்து

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.