”மஹதியோட பேச்சில உறுதி தெரியுது, கண்டிப்பா அவள் நினைச்சதை சாதிப்பா எது எப்படியோ ஜானகி வாழ்க்கை நல்லபடியா மாறினா அதுவே போதும் நமக்கு”
”இந்த விசயத்தில நாமளும் மஹதிக்கு துணையா இருக்கனும்ங்க, அவளை அப்படியே தனியா விட்டுடக்கூடாதுங்க”
”நீ சொல்றதும் சரிதான் மஹதியோட திட்டப்படி அவள் வேங்கையனோட வீட்டுக்குள்ள நுழையனும், அதுக்கு நாமளும் ஏதாவது செய்யனும் என்ன செய்யலாம்” என யோசிக்க அதற்கு வேணியோ
”எனக்கு ஒரு யோசனைங்க”
”என்ன அது, சொல்லு கேட்போம்“
”ஜானகியால வேங்கையன் வாழ்க்கை நாசமானதுக்கு பரிகாரமா மஹதியை வேங்கையனோட வாழ்க்கையில சேர்க்கனும்னு ஆசைப்படறோம், இதனால எங்களுக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சி நீங்கும்னு சொல்லி அவளை அந்த வீட்ல தங்க வைக்கலாம்”
”நீ சொல்றதும் சரிதான் இப்படி செய்தா ஜானகிக்கு சந்தேகம் வராது, எப்படியோ வேங்கையன் நம்மளை விட்டா போதும்னு நினைப்பா”
”அப்படின்னா அதுபடியே செய்யலாம்ங்க, முடிஞ்சா அடிக்கடி அங்க போய் மஹதியோட திட்டத்துக்கு நம்மால முடிஞ்ச சின்ன சின்ன உதவிகளை செய்தா, சீக்கிரமா பிரச்சனை சரியாயிடும்லங்க”
”கண்டிப்பா செய்யலாம் வேணி, எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு பல நாள் கழிச்சி இன்னிக்குதான் நான் நிம்மதியா தூங்கப் போறேன் வேணி” என சொல்லிவிட்டு அவர் கண்கள் மூடி உறங்கத் தொடங்க வேணிக்கும் பெரிய பாரத்தை இறக்கி விட்ட மகிழ்ச்சியில் அவரும் நிம்மதியாக உறங்கிப் போனார்.