(Reading time: 35 - 70 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

இருக்காங்க”

  

”மாணவர்களுக்கு நான் சுதந்திரத்தை கொடுத்திருக்கேன், அவங்க விருப்பம் போல நடந்துக்குவாங்க அவங்களுக்கு வகுப்பு இல்லாம இருக்கலாம் அதனால இப்படியிருக்காங்க”

  

”இதுக்கு பேரு சுதந்திரம் இல்லை சார், சுதந்திரம்ங்கறது ஒரு மாணவன் தன்னோட கருத்தை வெளிச்சொல்லனும் தயங்க கூடாது அது சுதந்திரம், தான் செய்ற ஒவ்வொரு செயலையும் யாருக்கும் பயப்படாம செய்யனும் அது சுதந்திரம், பேச்சு சுதந்திரம் தன் விருப்பத்தை சொல்லவும் செய்யவும் சுதந்திரம் இருக்கனும், இது கிடையாது, இதுக்கு பேரு சோம்பேறிதனம் பொறுப்பில்லாத தன்மை ஒழுக்கமின்மை”

  

”நிறுத்தறியா வெளிநாட்ல இப்படித்தான் இருப்பாங்க, ஆனா கடைசியில பரிட்சையில நல்ல மார்க் எடுப்பாங்க, மாணவர்களை வகுப்புல கட்டிவைக்க கூடாது, அவங்களுக்கு இடம் தரனும் அப்பதான் நல்ல ரிசல்ட் காட்ட முடியும் மேடம்” என்றான்

  

”சார் நீங்க சொல்றது சரிதான் ஆனா இது ஒண்ணும் வெளிநாடு கிடையாது, இது நம்ம நாடு இங்க சில கட்டுப்பாடுகள் இருக்கு, பழக்க வழக்கங்கள் இருக்கு அதை மீறி நடந்தா அதை ஒழுக்கமின்மைன்னுதான் சொல்வாங்க” என சொல்ல அவனோ அவளைப் பார்த்து முறைக்க

  

”ஓ என்னை ஏன் முறைக்கறீங்க, எனக்கு முன்னாடியே பல வருஷங்கள் முன்னால திருவள்ளுவர்ங்றவரு திருக்குறள்ல எழுதியிருக்காரு நீங்க படிச்சதில்லை”

  

”வாட் திருக்குறளா அப்படின்னா“

  

”ஓ சுத்தம், அப்ப உங்களுக்கு திருக்குறள் வகுப்பு எடுக்கனும் போல இருக்கே பரவாயில்லை சார், என் வேலைக்கு நடுவில கிடைக்கற ஓய்வு நேரத்தில உங்களுக்கு நான் பாடம் எடுக்கறேன்“

  

”நிப்பாட்டு எனக்கு நீ பாடம் எடுக்க வேணாம் எனக்கு எல்லாம் தெரியும்”

  

”ஆனா திருக்குறள் பத்தி தெரியாதுன்னு சொன்னீங்களே”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.