”இது என்ன காலகொடுமையா இருக்கு, நீ வேலைக்கு சேர்ந்த மறுநாளே இப்படி ஒரு விசயம் நடந்தா உனக்கு ப்ளாக் மார்க் வருமே“
”ம் தெரியும்”
”சரி பிரச்சனையை எப்படி சால்வ் பண்ணப் போற“
”அதுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிச்சிட்டு வர்றதுக்குதான் இவ்ளோ நேரம் ஆயிடுச்சி”
“அப்போ ஸ்ட்ரைக் நடக்காது அதானே”
“நடக்கும் ஆனா அதை சமாளிக்கற விசயத்தை நான் செய்துட்டேன் இனி கவலையில்லை”
”அதானே பார்த்தேன் நீ யாரு கண்ணகியாச்சே ரொம்ப டயர்டா இருக்க உனக்கு பதிலா நானே சமைச்சிட்டேன் சாப்பிடலாமா”
”நீ சமைச்சியா அய்யோ அந்த நூடுல்ஸ்தானே எனக்கு வேணாம் மாதவி”
”சாரி கண்ணகி எனக்கு சமையல் வராது, எனக்கு தெரிஞ்ச ஒரே டிஷ் நூடுல்ஸ்தான் அதான் செய்தேன்”
”சரி பரவாயில்லை ரொம்ப பசிக்குது அதையே சாப்பிடலாம் வா“ என சொல்ல அவளும் தான் செய்த நூடுல்ஸ் கொண்டு வந்து வைத்து அதை அவளுக்கும் இவளுக்குமாக பரிமாறிக் கொண்டு சாப்பிட்டார்கள்.
”அப்புறம் உன் வேலை என்னாச்சி” என கண்ணகி மாதவியிடம் கேட்க
”அதை ஏன் கேட்கற நீ அடிச்ச வேப்பிலையில என் முதலாளி மரை கழண்டு போயிடுச்சி