(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

மாட்டேன் அழாத”  என கெஞ்ச அவளோ வேண்டுமென்றே சத்தமாக அழுதுவைக்க அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை அவளின் அழுகுரல் கேட்டு வேலையாட்கள் தேடி வந்து

  

”அம்மா சின்னம்மா என்னாச்சிம்மா” என அறைக்கு வெளியே நின்றபடி விசாரிக்க கொம்பனுக்கு கஷ்டமாகிப் போனது, நிலைமையை சரியாக்க எண்ணி அழுபவளை சமாதானமாக்க தெரியாமல் தடுமாறி அவசர அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறி வர வேலையாட்கள் அவனை ஒரு மாதிரியாக கோபமாக பார்க்க அவனோ தலைகவிழ்ந்தபடியே அவ்விடம் விட்டு சென்றான்.

  

அவன் சென்றதும் ஒரு வேலைக்காரி மட்டும் காவேரியின் அறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து மற்ற ஆட்களிடம் விசயத்தை கூற ஒருவன் அவசர அவசரமாக சண்முகத்தை தேடிச் சென்று விசயத்தை கூற அவரோ முதலில் பதட்டமானார் கணக்குபிள்ளையோ நடந்ததைக்கேட்டு கொம்பன் என்னவானான் என அவனை தேடிச் சென்றான்.

  

கொம்பனோ பயத்தில் தன் தாய் வீட்டிற்குச் சென்று தாயிடம் தஞ்சமடைந்தான் எப்படியோ அவனை தேடிப்பிடித்த கணக்குபிள்ளையோ

  

”இங்க என்ன செய்ற” என கேட்க அவனோ அச்சத்துடன் இருக்க அவனது தாயோ

  

”என்னாச்சின்னு தெரியலை பாரு எப்படி பயப்படறான்னு, எனக்கு இவனைப் பார்க்கறப்ப ரொம்ப கவலையா இருக்கு” என புலம்ப

  

”அம்மா கொஞ்சம் இருங்கம்மா நீங்க பாட்டுக்கு பயப்படாதீங்க இவனுக்கு என்னாச்சின்னு விசாரிக்கிறேன் இருங்க” என சொல்லியவன் கொம்பனை போட்டு உலுக்க அவனும் நடந்ததைச் சொல்ல நொந்தேப் போனார்கள் மற்றவர்கள்

  

”உன் பொண்டாட்டி இதுக்கெல்லாமா அழுவா”

  

”என்னவோ அவளுக்கு என்னை பிடிக்கலைப் போல பிடிக்காத புருஷன் கைபட்டா குத்தம்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.