வெள்ளந்தியாக பார்த்தான்
”என்ன கொம்பா பார்த்தியா உன்னையே சாய்க்க வைச்சிட்டேன் இப்ப என்ன சொல்ற சவால்ல நான் ஜெயிச்சிட்டேன்” என்றாள் மகிழ்ச்சியாக அவனோ தான் தோற்றுவிட்டோம் என நினைத்து உள்ளுக்குள் வருந்தினாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
”அதெல்லாம் இல்லை நீ செஞ்சதுல எனக்கு தூக்கம் வந்துடுச்சி தூக்க கலக்கத்தில கண்ணை சொக்கினேன் அது உனக்கு தப்பா தெரிஞ்சா நான் என்ன செய்றது” என சமாளிக்க அவள் ஒப்புக் கொள்ளவில்லை
”இதை நான் நம்பனுமா போ போ”
”அப்படியா இரு நான் உன்னை கட்டிப்பிடிக்கிறேன் நீ உன் கட்டுப்பாட்டோட இருக்கியான்னு பார்க்கிறேன்” என சொல்ல அவளோ அதிர்ந்தாள்
”வேணாம் இதெல்லாம் தப்பு வேணாம்”
”ஒரு தப்பும் இல்லை என்னை இதுவரைக்கும் எத்தனை முறை கட்டிப்பிடிச்சன்னு எண்ணி வைச்சிருக்கேன் அதே போல நானும் பிடிக்கிறேன் வா” என அழைக்க அவளோ பின்னோக்கி சென்று ஓட ஆரம்பிக்க அவளை விரட்டிக் கொண்டு வீடு முழுக்க ஓடி கடைசியில் அவளது அறையில் சென்று அவளது கரத்தை பிடித்தான் அவளோ மூச்சிரைக்க அவனைப் பார்த்து மிரட்சியுடன்
”வேணாம்” என முனக அவனோ ஒரே இழுப்பு அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் அவ்வளவுதான் அவளின் கட்டுப்பாடு முற்றிலும் சென்றுவிட்டது.
அதை உணர்ந்தவள் கொம்பனிடம் தான் தோற்க கூடாது என நினைத்து சட்டென அழுவது போல நடித்தாள். அவளின் அழுகுரலைக்கேட்டு பதறிப் போன கொம்பன் அவளை விட்டு விலகி என்னவென பார்க்க அவளோ தன் நடிப்பை தொடர்ந்தாள்
”ஏய் எதுக்கு அழற வேணாம் அழாத என்னை மன்னிச்சிடு அழாத இனிமேல இப்படி செய்ய