கால்பட்டா குத்தம்”
”சே சே அப்படியிருக்காது ஒருவேளை அவள் பயந்துட்டா போல”
”என்னத்த பயம் வேண்டிக்கிடக்கு நான் என்ன யாரோவா ஏன் எனக்கு அவள்கிட்ட உரிமையில்லையா நான் கட்டிப்பிடிச்சா அவள் அப்படி அழறாளே நான் என்ன அவ்ளோ கெட்டவனா”
”சே சே நீ தங்கம்ல ஆமா நீ இங்க வந்தது அவளுக்குத் தெரியுமா”
”தெரியாது அம்மா”
”என்னடா இப்படி செய்துட்ட இந்த விசயம் தெரிஞ்சா அவள் கோச்சிக்குவாளே முதல்ல கிளம்பு நீ”
”அம்மா”
”என்னடா”
”பசிக்குதும்மா” என சொல்ல அவரோ துக்கப்பட்டு மகனுக்கு சாப்பாடு வைத்து அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தார். அவன் சாப்பிட்டதும்
”சரி சரி நேரமாச்சி கிளம்பு கிளம்பு உன் பொண்டாட்டிக்கு தெரியறதுக்குள்ள கிளம்பு”
”அம்மா எனக்கு அங்க போகவே பயமாயிருக்கும்மா எந்நேரம் அவள் சிரிக்கறா எந்நேரம் அவள் அழறாள்ன்னே கண்டுபிடிக்க முடியலைம்மா கஷ்டமாயிருக்கு”
”போக போக பழகிடும், இப்ப கிளம்புடா பிரச்சனை வந்துடப்போகுது எனக்கு பதட்டமா இருக்கு கிளம்பு” என சொல்ல அவனும் அரை மனதுடன் கிளம்ப எத்தனிக்க காவேரியோ வீட்டின் முன் நின்று