(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அப்படி செய்தா உனக்கு நான் தண்டனை தருவேன்”

  

“என்ன தண்டனை”

  

”100 தோப்புக்கரணம் போடனும்”

  

”ஓ என்னையே இந்த கொம்பனையே தோப்புக்கரணம் போடவைப்பியா”

  

”ஆமாம் தப்பு செய்தா கொம்பன் என்ன யாரா இருந்தாலும் தண்டனை தருவேன்”

  

”அப்போ நான் செஞ்ச தப்புக்கு தோப்புக்கரணம் போடனும் அப்படித்தானே”

  

”ஆமாம் இப்பவே போடு”

  

”ஓ போடறேனே ஒரு தப்பு செய்தாலும் தப்புதான் 10 தப்பு செய்தாலும் தப்புதான் ஏற்கனவே நான் என் அம்மா வீட்டுக்கு போய் ஒரு தப்பு செய்துட்டேன் கூட 9 தப்பு செய்துட்டே தோப்புக்கரணம் போடறேன்” என சொல்ல அவளோ

  

”என்னது 9 தப்பா அது என்ன” என கேட்க அவனோ அவளை நெருங்கி சட்டென அவளின் முகத்தை இரு கையால் ஏந்தி இரு கன்னத்தில் இரு முத்தம் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தவன் இதழில் முத்தம் தந்தான்.

  

இதோ அதோ என 9 முறை முத்தம் தந்துவிட்டு அவளை விட்டு விலகி நின்று 100 முறை தோப்புக்கரணம் போடலானான் அவளைப் பார்த்தபடியே, அவளுக்கோ அவன் தந்த முத்தம் என்னவோ செய்தது, உள்ளம் உருகி அவனை பார்க்க அவனோ தப்பு செய்த மாணவன் போல வெறுப்பாக தோப்புக்கரணம் போட அதைக்கண்டு அவளுக்கு சிரிப்பே வந்தது

  

”இந்த கொம்பனை என்னதான் செய்றதோ செய்றதை செய்துட்டு எப்படி நடந்துக்கறான் பாரு சரியான சேட்டைக்காரன்” என நினைத்து அங்கிருந்து சென்றுவிட அவள் சென்றதும் தோப்புக்கரணம் போடுவதை நிறுத்தியவன்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.