”பார்த்தியா என்ன நடக்குதுன்னு, இதுக்கு முழு பொறுப்பு நீ மட்டும்தான்” என்றான் அவசரமாக
”ஓகே சார் முழு பொறுப்பையும் நானே ஏத்துக்கறேன் என்ன இப்ப” என இயல்பாகச் சொல்ல
”விளையாடறியா வெளிய ஸ்ட்ரைக் நடக்குது”
”நடக்கட்டும் சார்”
”அதை சரியாக்க போறதில்லையா நீ”
”இதோ இப்பவே ஆமா நீங்க ஏன் பதட்டமா இருக்கீங்க சார்”
”எல்லாம் என் நேரம் உனக்கு ஏதாவது ஆனா எனக்குதான் கெட்டப்பேர் வரும் அதான் பார்க்கிறேன்”
”எனக்கு ஒரு ஆபத்தும் வராது சார்”
”ரொம்ப தெனாவெட்டா பேசாத, மாணவர்கள் ரொம்ப கோபத்தில இருக்காங்க இதுக்குதான் அவங்களை ரொம்ப கடுமையா நடத்தக்கூடாதுங்கறது, அவங்களுக்கு நீ தண்டனை கொடுக்கற“
”ஓ படிக்க சொன்னதும் ஒழுங்கா இருக்க சொன்னதும் ஒரு தண்டனையா சார்”
”ஆமாம் அவங்க சுதந்திரமா இருந்தாங்க ஆனா உன்னால அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க“
“அய்யோ பாவம்“ என்றாள் உச்சு கொட்டி
”பாரு நீயும் அவங்களை நினைச்சி பாவப்படற“
”இல்லை சார் நான் அவங்களை நினைச்சி பாவப்படலை உங்களை நினைச்சி பரிதாபப்படறேன்”