”ஷ் என்ன சத்தம் அங்க” என கேட்க ஒரு மாணவன் எழுந்து
”இது அநியாயம் வழக்கமா செமஸ்டர் இந்த மாசத்துல வராது, இன்னும் 2 மாசம் இருக்கு”
“ஆமாம் ஆனா இப்ப எல்லாம் மாறிடுச்சி”
”அதெப்படி மாத்தலாம்”
”ஏன் மாத்தக்கூடாது சட்டதிட்டங்களை போட்டதே நாங்கதானே”
”அதுக்குன்னு உங்க இஷ்டத்துக்கு செய்வீங்களா, இன்னும் எங்களுக்கு எந்த பாடமும் நடத்தலையே எப்படி செமஸ்டர் எக்ஸாம் எழுதறது”
“அது என் தப்பில்லையே ஆசிரியர்கள் தப்பு, அவங்க ஏன் உங்களுக்கு பாடம் எடுக்கலை” என கேட்க மாணவர்களின் கோபம் ஆசிரியர்கள் பக்கம் திரும்பியது, இப்போது ஆசிரியர்களின் நிலைமை படுமோசமானது
கண்ணகியும் ஆசிரியர்களைப் பார்த்தாள், அதில் அனைவரும் பதைபதைப்புடன் இருக்க சிலம்பரசன் மட்டும் தெனாவெட்டாக இருப்பதைக்கண்டு உடனே புரிந்துக் கொண்டாள், அவன்தான் கோவலனின் நண்பன் என்று, அதனால் வேண்டுமென்றே அவனை அழைத்தாள்
”வைஸ் பிரின்சிபால் என்ன அமைதியா நிக்கறீங்க, மாணவர்களுக்கு விளக்கம் சொல்ல மாட்டீங்களா” என கேட்க சிலம்பு அதிர்ந்தான்.
திருதிருவென விழித்தான் அவன் பேச்சைக் கேட்டு வந்த ஆசிரியர்கள் அவனை பார்த்து முறைக்க அவன் திணறினான் அவனது நிலைமையைக்கண்ட கோவலனோ கண்ணகியிடம்
”எதுக்கு சிலம்புவை இதுல இழுக்கற, அவன் பாவம் என்னோட நண்பன் விட்டுடு”
”நண்பனா அதெல்லாம் காலேஜ்க்கு வெளிய, இங்க அவரு வைஸ் பிரின்சிபால் நியாயமா