(Reading time: 7 - 14 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

எனக்கு ஃபோன் வாங்கினதுக்கு தேங்க்ஸ்... ஆனால், அதுக்கான பணத்தை வாங்கிட்டுப் போ...”

  

என்ன ஆனந்த் இது? ஏன் இப்படி பேசுறீங்க???

  

எனக்காக இப்படி மத்தவங்க செலவு செய்றது எனக்கு பிடிக்காது.”

  

நல்ல பாலிசி தான்... ஆனால் நான் ஒன்னும் மூணாம் மனுஷி இல்லையே...”

  

அதை நான் தானே முடிவு செய்யனும்! இதுக்கு மேல இது போல எல்லாம் எனக்காக நீ வாங்க வேண்டாம். லேட்டஸ்ட் ஐபோன் ஒரு லட்சம் மேல இருக்குமே... இந்த செக்...”

  

ஆனந்த்!!! என்ன இது?” பாரதியின் குரலில் இப்போது கோபம் கலந்திருந்தது!

  

உன் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை,” என்றான் விவேக் கடுமையாக!

  

என்ன ஆச்சு உங்களுக்கு? நல்லா தானே இருந்தீங்க? எதுக்கு திடீர்னு இப்படி நடந்துக்குறீங்க??? என்னன்னு சொல்லுங்க... என்றாள் பாரதி குரலை மீண்டும் அமைதியாக்கி....

  

இப்போ தான் நான் ரொம்ப தெளிவா இருக்கேன்! இதோ பார் பாரதி, நம்ம கல்யாணம் என்னை பொறுத்தவரை ஒரு தப்பான விஷயம்...”

  

விவேக்கின் முகத்தை கூர்ந்து பார்த்த பாரதி,

  

இது எப்போ வந்த ஞானோதயம்?” என்றாள்!

  

நேத்து தான்! என்னை தேவை இல்லாமல் கேள்வி மேல கேள்வி கேட்டு கடுப்பேத்தாதே...”

  

சரி...”

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.