பிய்த்து சீசருக்கு கொடுத்தாள் சத்யா. ஒரே வினாடியில் காலி செய்து விட்டு தன் வாலை ஹை ஸ்பீடில் அசைத்து சந்தோஷத்தைக் காட்டியது சீசர்.
“நீ ஏன் அருண் சாப்பிடாம இருக்க? நான் கொடுத்தா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க, சாப்பிடு,” என அருணிடம் சொன்னாள் சத்யா.
அருண் அப்போதும் அஹல்யாவை பார்த்துக் கொண்டு நின்றான்.
“ஆன்ட்டி சொல்றாங்கள்ள, சாப்பிடு,” என்றாள் அஹல்யா.
அருண் சந்தோஷம் பொங்க குல்ஃபியை கையில் எடுத்தான்.
“டீச்சரா இருக்கீங்க சரி! அதுக்காக இப்படியா வீட்டுல பையனை மிரட்டி வைப்பீங்க?” என அஹல்யாவிடம் வினவினாள் சத்யா.
“மிரட்டி வைக்கலை. எங்கம்மா எனக்கு சின்ன வயசுல சொல்லிக் கொடுத்த பழக்கம் இது!” அஹல்யாவின் முகத்தில் கரிய ரேகை வந்து படர்ந்தது.
அஹல்யா முகத்தில் வந்த மாற்றம் சத்யாவின் கண்களை தப்பவில்லை! அதை கவனித்துக் கொண்டே, “அம்மா எங்கே இருக்காங்க அஹல்யா?” என அவளிடம் வினவினாள் சத்யா.
“ஊருல... ஊருல இருக்காங்க!”
இதை சொல்ல எதற்கு இவ்வளவு யோசிக்கிறாள்? சத்யாவிற்கு புரியவில்லை.
🌼🌸❀✿🌷
“உனக்கு வாட்ஸ் அப்ல டிரைவிங் லைசன்ஸ் போட்டோ அனுப்பி இருக்கேன் பிரணய். எவ்வளவு டீடெயில்ஸ் கலக்ட் செய்ய முடியுமோ அவ்வளவு டீடெயில்ஸ் வேணும்!” சக்தி மொபைலில் அமைதியான குரலில் பேசினாள்.