(Reading time: 32 - 64 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

தொடர்கதை - பூவா? தலையா? - 04 - சசிரேகா

மறுநாள் காலையில் கண்ணகி அவசர அவசரமாக ரெடியாகிக் கொண்டிருக்க அதைக்கண்ட மாதவியோ

  

”ஏய் இரு இரு எதுக்கு இப்படி அவசர அவசரமா ரெடியாகற”

  

”நேரமாகுது”

  

”அப்படி ஒண்ணும் நேரமாகலையே ஆமா காலேஜ்ல ஏதாவது பிரச்சனையா”

  

”இல்லையே ஏன் கேட்கற”

  

”இல்லை உன்னோட அவசரத்தைப் பார்த்தா ஏதோ பிரச்சனை நடக்கும்னு நினைக்கிறேன்”

  

”பிரச்சனையா”

  

”ஆமாம் உனக்கு என்னடிம்மா நீ பாட்டுக்கு காலேஜ்ல பிரச்சனை பண்ணிடுவ, உடனே தாளாளருக்கு கோபம் தலைக்கு ஏறிடும், அந்த கோபத்தோடவே அவரு கம்பெனிக்கு வருவாரு நான் மாட்டி தவிப்பேன்”

  

”ப்ச் எந்த பிரச்சனையும் இல்லை, 2 மாசத்துல செமஸ்டர் எக்ஸாம் வருது, அதுக்குள்ள பாடம் எடுத்து முடிக்க முடியாது அதனால தேவையான கேள்விக்குண்டான பதில்களை மட்டும் பாடமா எடுக்க சொல்லி எல்லா ஆசிரியர்களிடமும் சொல்லனும், ஒரு சின்ன மீட்டிங் ஏற்பாடு செய்யனும் அதுக்குதான் அவசரமா கிளம்பறேன்“

  

”இது அநியாயம்டி உன்னோட காலேஜ்ங்கறதால உன் இஷ்டப்படி செய்வியா, நியாயம் தர்மம்னு இல்லை மத்த காலேஜ்ல இப்படி நடந்தா நீ சும்மாயிருப்பியா” என சொல்ல கண்ணகி தொய்வாக அமர்ந்தாள்

  

”எனக்கும் இது தப்புன்னு தெரியும், ஆனா என்ன செய்றது மாதவி காலம் கடந்துப் போச்சே”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.