(Reading time: 32 - 64 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”கடந்தா என்னடி, தப்பு உன் மேல இல்லை, நீ எதுக்காக தப்பான வழியை காட்டனும் அப்புறம் இதுதான் சாக்குன்னு ஒவ்வொரு செமஸ்டர் எக்ஸாம்க்கும் இதையே எதிர்பார்த்தா உன்னால செய்ய முடியுமா சொல்லு”

  

”நீ சொல்றதும் வாஸ்தவம்தான் சரி மாதவி என்ன நடக்குதோ நடக்கட்டும் ஆனா நிறைய பேர் அரியர் வைப்பாங்க”

  

”வைக்கட்டுமே அரியர் வைக்காத காலேஜ் மாணவன் உண்டா என்ன”

  

”ம் இப்பதான் என் மனசு லேசாயிருக்கு, தப்பான முடிவு எடுத்து அதை நினைச்சே மனசு படபடன்னு இருந்துச்சி, நீ பேசின பின்னாடி நான் தெளிவாயிட்டேன்”

  

”என்னவோ இதப்பாரு கண்ணகி நீ என்ன செய்றியோ செய் ஆனா ஒண்ணு அந்த கோவலனை மட்டும் கோபப்படுத்தி அனுப்பி வைச்சிடாத சரியா” என சொல்ல அவளும் சிரித்தபடியே

  

”முயற்சி பண்றேன்” என சொல்ல மாதவிக்கு திக்கென்றது.

  

இரு பெண்களும் தயாராகி ஒன்றாக ஸ்கூட்டியில் கிளம்பி சென்றார்கள், முதலில் காலேஜில் கண்ணகியை இறக்கிவிட்ட மாதவி கல்லூரியை வேடிக்கைப் பார்த்தாள்

  

”என்னடி அப்படி பார்க்கற”

  

”இல்லை 2 நாள்ல நிறைய மாற்றம் தெரியுதே, சும்மா சுத்திக்கிட்டிருந்த மாணவர்கள் யாருமே இல்லையே”

  

”ஏன் அது உனக்கு வருத்தமா இருக்கா”

  

”ஆமாம் என்னை பார்த்து ரசிக்கவே இங்க சில மாணவர்கள் இருந்தாங்க அவங்களை காணலை அதான் வருத்தமா இருக்கு” என சிரிப்புடன் சொல்ல கண்ணகியோ

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.