”உன்னை பார்த்து ரசிக்க தாளாளர் வருவாரு இப்ப கிளம்பு”
”அய்யோ அந்தாளை ஏன்டி இப்ப போய் ஞாபகப்படுத்தற, போடி நான் போறேன்” என சொல்லிவிட்டு மாதவி சென்றுவிட கண்ணகி நடந்து காலேஜ்க்குள் நுழைந்தாள்.
இப்போது அவளுக்கு ராஜமரியாதைதான், முதலில் அவளைக்கண்டு மரியாதை தராமல் இளப்பமாக நடந்துக் கொண்டவர்கள் இப்போது மரியாதையுடன் நடந்துக் கொண்டார்கள், வாட்ச்மேன் செக்யூரிட்டி ப்யூன் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் அவளுக்கு மதிப்பு தர அதில் அவள் மனம் நிம்மதியடைந்து தன் அறைக்குச் சென்று அமர்ந்து வேலை பார்க்கலானாள், சரியாக 9 மணிக்கு பெல் அடித்தது. வகுப்புகள் நடந்தபடி இருந்தது, ஒன்பதைரை மணியளவில் தாளாளர் கோவலன் அந்த கல்லூரிக்குள் பிரவேசித்தான்.
முன்பு அவன் பார்த்த கல்லூரிக்கும் இப்போது அவன் பார்த்த கல்லூரிக்கும் அப்படியொரு வித்தியாசம் அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது, நமது கல்லூரிதானா இது என வியப்படைந்தான். இப்போதுதான் அவனுக்கு கண்ணகி சொன்னது நினைவுக்கு வந்தது, ஒழுக்கம் என்பது அனைத்து இடத்திலும் இருப்பது அவசியம் என்பதை உணர்ந்தான்.
கார் விட்டு இறங்கி நேராக அவளை பார்க்கவே சென்றான். அறைக்கு உள்ளே தடாலடியாக நுழைய அந்நேரம் யாரும் வரமாட்டார்கள் என்ற நினைப்பில் கண்ணகியோ கசங்கியிருந்த தனது முந்தானையை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள். கோவலனின் வரவில் அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது. கோவலனுக்கும் தர்மசங்கடமாகி சட்டென வெளியேறி தன் அறைக்குச் சென்றான்
”அறிவிருக்காடா உனக்கு நீ பாட்டுக்கு உள்ள நுழையற முட்டாள்” என தன்னையே திட்டிக் கொண்டான்.
கண்ணகிக்கு கோபம் எழுந்தது உடனே ப்யூனை அழைத்து திட்டினாள்
”என் ரூமுக்கு யார் வந்தாலும் முதல்ல எனக்கு தகவல் சொல்ல சொல்லி சொன்னேன்ல”