”சாரி மேடம் வந்தது தாளாளர் அதான்”
”யாரா இருந்தா என்ன” என அவள் கத்த ப்யூன் நடுங்கிப் போனான்.
”போய் அவரை வர சொல்லு” என அதட்ட ப்யூனும் நேராக தாளாளர் அறைக்குச் சென்றான்.
”சார் உங்களை பிரன்சிபால் மேடம் வரசொன்னாங்க” என சொல்ல அதிர்ந்தான் கோவலன் பயத்தில் அவனது கைகால் நடுங்க அதைக்கண்ட ப்யூனோ
”சார் என்னாச்சி சார் ஏதாவது பிரச்சனையா சார்”
”யோவ் போய்யா வெளிய” என கத்த அதில் அவன் ஏதோ பிரச்சனை என நினைத்தபடியே வெளியேறி சென்றான்.
கண்ணகியை எதிர்கொள்ள போதிய தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நேராக அவளின் அறைக்கு வெளியே நின்று
”உள்ள வரலாமா” என அனுமதி கேட்க
”வாங்க” என்றாள் கண்ணகி அவனும் உள்ளே நுழைந்தான் அவளோ கோபத்தில் உக்கிரமாக அமர்ந்திருந்தாள்
”சரியா போச்சி பத்ரகாளி போல உட்கார்ந்திருக்காளே இப்ப நம்மளை என்ன செய்வா தெரியலையே, மதுரையை எரிச்ச மாதிரி நம்மளை எரிச்சிடுவாளா” என நினைத்தபடியே அவளின் முன் நின்றான் அமைதியாக
”மேனர்ஸ்னா என்னன்னு தெரியாதா உங்களுக்கு”
”ப்ச் தெரியாம நடந்துப் போச்சி”