”சே தலைமையே சரியில்லை, அதான் காலேஜ் இந்த கதியில இருக்கு இதுதான் சுதந்திரமா“
”அய்யோ அம்மா தாயே, நான் தெரியாம உள்ள வந்துட்டேன் முக்கியமான ஒரு விசயம் அதை உன்கிட்ட கலந்து பேசலாம்னு வந்தேன், அந்நேரம் நீ அப்படி இப்படி இருப்பன்னு நான் என்னத்த கண்டேன்”
”உள்ள வரும் போதாவது வரலாமான்னு கேட்டுட்டு வந்திருக்கலாம்ல”
”இது என்னோட காலேஜ்”
”இப்ப இது என்னோட காலேஜ் நான்தான் இங்க பிரின்சிபால், தாளாளர் பதவியில உங்களை உட்கார வைச்சிருக்காங்க, அதுக்காக பெண்கள்கிட்ட முறைகேடா நடந்துக்கனும்னு அவசியம் இல்லை” என அவள் ஓவென கத்த அதில் அவன் அரண்டுப் போனான்.
”சரி சரி சரி ரிலாக்ஸ் என்னை மன்னிச்சிடு” என கைகூப்பி மன்னிப்பு கேட்கவும் அதோடு அமைதியானாள் கண்ணகி
”உட்காருங்க” என்றாள் கண்டிப்புடன் அவனும் இருக்கையில் அமர்ந்தான்
”வந்த விசயம் என்ன” என்றாள் அதிகாரமாக
”நீ தப்பா நினைக்கலைன்னா சொல்றேன்“
”முதல்ல சொல்லுங்க அப்புறம் பார்க்கலாம்”
”என்ன சார்ன்னு கூப்பிடுவ எங்க காணலை“
”நீங்க செஞ்ச வேலைக்கு சார் ஒண்ணுதான் கேடு” என அவள் திட்ட அவன் நொந்துப் போய்
”தேவைதான் எனக்கு சே” என புலம்ப