Page 27 of 29
”பார்ட்டியா என்ன பார்ட்டி”
”பர்த்டே பார்ட்டி”
”யாருக்கு பர்த்டே”
”எனக்குதான்”
“இது எப்ப”
”அடுத்த மாசம்”
”அடுத்த மாசம்தானே”
”இரு இரு அன்னிக்கு நீ உடுத்த நான் புடவை எடுத்து தரேன்”
”நீங்க எதுக்கு இதை செய்யனும் விடுங்க நானே பார்த்துக்கறேன்” என சொல்லியும் அவன் கேட்காமல் அழகான இளம் சிவப்பு புடவையை தேடி அவளிடம் நீட்டினான்
”போ போய் போட்டுட்டு வா“
”ப்ச் கோவலன் இதெல்லாம் வேணாம்”
”ப்ளீஸ்”
”ஷ்ஷ்” என நொந்துக் கொண்டே ட்ரையல் ரூமுக்கு சென்றவள் தான் அணிந்திருந்த உடை மீதே அந்த புடவையை கட்டிக் கொண்டு வந்தாள். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது
”நல்லாயிருக்கு மாதவி இந்த உடையைதான் நீ என்னோட பிறந்தநாளுக்கு கட்டிக்கிட்டு