வரனும்”
”ஓகே” என அலுப்பாக சொல்லிவிட்டு உடையை மாற்றிக் கொண்டு வர செல்ல அதற்கு நடுவில் கோவலன் ஆண்கள் செக்ஷனுக்கு சென்று அதே இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு கோட் சூட் வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். மாதவியோ கோவலனை தேடினாள். அவன் வரவும்
”எங்கதான் போனீங்க, எங்கெல்லாம் தேடறது உங்களை சொல்லிட்டுப் போறதில்லையா” என கோபித்துக் கொள்ள அந்த உரிமையான கோபம் கூட அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது
”என்னோட பிறந்தநாளுக்காக நான் கோட் சூட் எடுக்கப் போனேன்“
”ஓ அப்படியா”
“பார்க்கறியா“
”இல்லை நான் உங்க பிறந்த நாள் அன்னிக்கே பார்த்துக்கிறேன், இப்ப எனக்கு நேரமாச்சி நான் கிளம்பனும்“ என சொல்ல அவனும் சரியென்றான்.
கண்ணகிக்காக எடுத்த புடவைகளுக்கு மட்டும் பணம் தந்து பில் வாங்கினாள், அவளுக்கென கோவலன் எடுத்த புடவைக்கு அவனே பில் கட்டினான், அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வீடு நோக்கி புறப்பட்டாள் மாதவி.
கோவலனோ மகிழ்வுடன் வீடு திரும்பியவன் தன் தாத்தாவிடம் அந்த கோட்சூட் காட்டி
”எப்படியிருக்கு தாத்தா இதுதான் என்னோட பிறந்த நாள் உடை” என சொல்ல அவரோ வியந்தார்
”இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் நீ கேட்டதில்லையே, உன்கிட்ட நிறைய மாற்றங்கள் தெரியுது என்ன நடக்குது”
”அது அப்படித்தான்”