(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

மதுவிடம் பொதுப்படையாக பேசுவதுப் போல, விவேக் பற்றி விசாரித்தாள்...

   

"அண்ணா இப்போ எல்லாம் ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறார்... எனக்கு இப்போ ட்ரைவிங் க்ளாஸ் வேண்டாம்ன்னு சொன்னாலும் கேட்காம கட்டாயம் கத்துக்கிட்டே ஆகணும்னு ட்ரைவிங் கிளாஸ்க்கு கூட்டிட்டுப் போனார். க்ளாஸ் என்னவோ நல்லா தான் இருக்கு..." என்று மது சொல்லவும், பாரதியின் சந்தேகம் வலுப்பட்டது!

   

உமாவிடமும், அதே போல பேச்சு கொடுத்துப் பார்த்தாள்...

   

"விவேக் இவர் கிட்ட இப்போ எல்லாம் நிறைய ரெஸ்பான்சிபிலிட்டீஸ் கொடுக்கிறாராம்... அவருக்கு தெரியாத விஷயம்ன்னு சொன்னா கூட நான் சொல்லி தரேன்னு பொறுமையா  சொல்லி தராராம்... இவர் இப்போ எல்லாம் எப்போ பார் விவேக் புகழ் தான் பாடிட்டு இருக்கார்..." என்று சொல்லி பாரதியை மேலும் குழப்பி விட்டாள் உமா!

இரவில், மனதில் குழப்பத்துடன் உறக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்த பாரதி, நள்ளிரவு பன்னிரண்டு மணி அளவில், விவேக் அறைக்குள் வருவதை அரவம் கொண்டு புரிந்துக் கொண்டு, தூங்குவது போல் கண்களை மூடி பாசாங்கு செய்தாள். அவள் விழித்திருப்பது தெரிந்து அவன் வேறு இரவு உணவு உண்ணாமல் தூங்கினால் என்ன செய்வது?

  

பாரதி நினைத்ததுப் போலவே வந்தது விவேக் தான். முடிந்த அளவில் சத்தம் எழுப்பாமல் வந்தவன், தூங்கி கொண்டிருந்த மனைவியை பார்த்த படி நின்றான். இரவு விடிவிளக்கில் தெரிந்த அவளின் வரி வடிவம் அவனை சுண்டி இழுத்தது.

  

விவேக்கிற்காக என்று தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பாரதியால், அவன் தன்னை பார்த்துக் கொண்டு தான் நிற்கிறான் என்பதை உணர்ந்துக் கொண்ட பின் அதே போல் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. கண்களை திறந்தவளிடம் சிறு அசைவு தோன்றவும், விவேக் அவசரமாக நகர்ந்து அறையில் இருந்து வெளியில் சென்றான்.

  

காலையில் மேலும் குழப்பத்துடன் கண் விழித்த பாரதியின் மனதில், விவேக்கின் மாற்றத்திற்கான காரணத்தை அறிந்துக் கொண்டே தீருவது என்ற புதிய வைராக்கியம் தோன்றி இருந்தது. அவளை கண்டுக் கொள்ளாமல் ஆஃபிஸ் அறையில் இருந்தவனிடம், வலிய சென்று

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.