(Reading time: 9 - 17 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

ஆராய்ந்துக் கொண்டே நடந்தாள்.

   

அவனுக்கு அவளை பார்க்கவே பிடிக்கவில்லையாமே???!!!!

   

மனசுக்குள் என்ன சந்தேகம் இருந்தாலும், விவேக் சொன்னதை அப்படியே உண்மை என்று நம்ப பாரதிக்கு மனம் வரவில்லை...

   

ஒருவேளை அவனுக்கு நிஜமாகவே வேலை அதிகமோ? அந்த டென்ஷனில் இப்படி நடந்துக் கொள்கிறானோ??? இல்லையே, மதுவும், உமாவும் சொன்னதை வைத்துப் பார்த்தால் மற்றவர்களிடம் அவன் நேரம் செலவிடுகிறான் என்று தானே தெரிகிறது... அவள் மீது மட்டும் ஏன் அவனுக்கு இந்த கோபம்??? பல பல சிந்தனைகள் தோன்றி மறையவும், பாரதியின் மனதில் திடிரென ஒரு எண்ணம் தோன்றியது!

   

ஒருவேளை பாலா எதாவது சொல்லி இருப்பானோ???

  

ஆனால், பாலா சொல்லி விவேக் அவளை வெறுக்க என்ன இருக்கிறது?

  

ஒருவேளை அவளின் சந்தோஷத்தை கெடுக்க, பாலா ஏதேனும் இட்டுக் கட்டி பொய் கதைகள் சொல்லி இருந்தால்?

  

இல்லை பாலா அப்பாடி ஏதாவது சொன்னாலும் விவேக் அதை எல்லாம் பெரிதாக நினைக்க மாட்டானே...

  

பாரதி தனக்கு தானே கேள்வியும் கேட்டு, சமாதானமும் செய்துக் கொள்ள முயலும் போதே, அவளின் மனம் அவளின் சந்தேகம் தான் உண்மையாக இருக்கும் என்று ஜோசியம் கூறியது.

  

அதே குழம்பிய நிலையில் உணவறைக்கு வந்து காலை உணவை எடுத்து உண்ண தொடங்கிய பாரதிக்கு, உமா அவளிடம் கேட்ட கேள்வி காதில் விழவே இல்லை. அங்கே இருந்த கற்பகமும் அமைதியாக இருந்த பாரதியை ஆச்சர்யமாக பார்த்தாள். கொஞ்ச நாட்களாகவே விவேக்கிடம் இருந்த மாற்றம் பாரதியை மட்டும் அல்லாது மற்றவர்களின் கவனத்தையும் ஈர்க்க தான் செய்தது.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.