(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”இதுல என்னடி வெட்கம் வேண்டிக்கிடக்கு, என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுக்கறாங்க அதுல உனக்கென்ன பிரச்சனை, உனக்கு தேவை சாப்பாடு, அது ரெடியா இருக்கா அதைப்பாரு”

  

”ஓ பார்க்கிறேனே இத்தனை நாளும் என்னை முட்டாளாக்கிட்டு அம்மாவும் புள்ளையும் ஆட்டமா ஆடறீங்க, நாளைக்கு இருக்கு உனக்கு” என சொல்லியவள் கொம்பனின் தாயிடம்

  

”இதுவே கடைசியா இருக்கட்டும் இதுக்கு அப்புறம் பின்வாசல் என்ன முன் வாசல் வழியா வந்தா கூட என் அனுமதி இருக்கனும், என்னை மீறி கொம்பனை பார்க்க வந்தீங்க நல்லாயிருக்காது சொல்லிட்டேன்”

  

”ஏன்மா கோச்சிக்கற நான் அவனை வந்து பார்க்கறதால உனக்கென்ன பிரச்சனை“

  

”நீங்க வந்து போயிடுவீங்க அப்புறம் உங்க பேச்சைக் கேட்டு அவன் ஆடுவான் இதுதேவையா எனக்கு“

  

”சே சே நான் ஒண்ணும் அவன்கிட்ட எதையும் பேசறதில்லை வெறும் சமையல்தான்”

  

”இதை நான் நம்பனுமா, யாருக்குத் தெரியும் கண்டிப்பா நீங்க அவனுக்கு கண்டதை சொல்லிக் கொடுத்து வைச்சிருப்பீங்க, எப்படியாவது என்னை அடக்கி வைக்க வழிகளை சொல்லியிருப்பீங்க, நீங்க சொல்லிக் கொடுக்கறதை வைச்சி அவன் என்கூட சண்டை போடனுமா, இப்படி எங்க வாழ்க்கையை கெடுக்கறதுல உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்” என சொல்ல கொம்பனின் தாய் கண்கள் கலங்கி காதை தன் இரு கைகளால் மூடிக் கொண்டு

  

”போதும்மா போதும் இனி நான் இங்க வரலை அப்படியே வர்றதாயிருந்தா உன் அனுமதியோடு வந்து என் புள்ளையை பார்த்துக்கிறேன், என் விசயமா பாவம் அவனை நீ எதுவும் சொல்லிடாதம்மா, நான் செஞ்சது தப்பு, அவன் மேல எந்த தப்பும் இல்லை இதோட இந்த பிரச்சனையை விட்டுடும்மா, என்னை மன்னிச்சிடு நான் கிளம்பறேன்” என கைகூப்பி

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.