(Reading time: 27 - 54 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

இவ்விருவரும் அவளைக்கண்டு அரண்டுப் போனார்கள், அவளோ கைகளை தட்டியபடியே இருக்க இருக்க இவ்விருவருக்கும் வேர்த்துக் கொட்டியது.

  

அந்த கைதட்டல் சத்தம் கேட்டு உள்ளிருந்து சண்முகமும் கணக்குப்பிள்ளை கூட வந்து பார்த்து அதிர்ந்தார்கள். கொம்பனின் தாயோ

  

”அது வந்து கொம்பனை பார்க்கனும் போல இருந்தது அதான் வந்தேன்” என திக்கி தடுமாறி சொல்ல அதற்கு காவேரியோ கைதட்டுவதை நிறுத்திவிட்டு

  

”அதுக்கு ஏன் முன்வாசல் வழியா வராம பின் வாசல் வழியா வர்றீங்க”

  

”எந்த வாசலா இருந்தா என்னம்மா இது நம்ம வீடுதானே” என சமாளிக்க அவளோ கோபத்தில்

  

”இதுதான் கடைசியா இருக்கனும், இப்படியே செல்லம் கொடுத்து உங்க புள்ளையை கெடுத்தது போதும் இன்னுமா”

  

”சே சே அப்படியில்லைம்மா”

  

”கொம்பன் அவனா சமைச்சி சாப்பாடு போட்டு அது கன்றாவியா இருந்தாகூட பரவாயில்லைன்னு சாப்பிடுவேன், ஆனா இப்படி நீங்க அவனுக்கு சொல்லிக் கொடுத்து செய்ய வைக்கறீங்க, சே நல்ல குடும்பம்னு நினைச்சேன், இப்படியாப்பட்ட குடும்பமா இருக்கீங்களே நீங்க மட்டும்தானா இல்லை உங்க வீட்டுக்காரரு கூட திருட்டுத்தனமா கொம்பனுக்கு உதவறாரா, இப்படி பின்வாசல் வழியா வர்றீங்களே இதுதான் உங்க பண்பாடா சே”

  

”போதும் காவேரி இதுக்கு மேல பேசின அடிவாங்குவ” என கோபத்தில் பொங்கினான் கொம்பன்

  

”ஆமா இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை இப்படிதான் நீ சமைச்சி போடறியா எனக்கு, இதெல்லாம் உனக்கு வெட்க கேடா இல்லை”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.