(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”சாப்பிட மாட்டான்”

  

”சே இது தெரியாம போச்சே“

  

”அவனுக்கு பிடிச்சது தெரிஞ்சி வைச்சிக்கிட்டா பத்தாது, அதை எப்படி செய்து வைக்கனும்ங்கற விசயத்தையும் தெரிஞ்சி வைச்சிருக்கனும்” என்றார் செல்வம்

  

”இனிமேல சரியா செய்றேன் மாமா” என சொல்ல உடனே பரிமளாவோ

  

”மிக்சி எல்லாம் பயன்படுத்தக்கூடாது, எதுவாயிருந்தாலும் அம்மிலதான் அரைக்கனும், அப்பதான் ருசியா இருக்கும், எங்க வீட்டு பழக்கம் இதுதான் அப்புறம் அவன் சாப்பிடறப்ப கண்டிப்பா பொறியலோ இல்லை கூட்டோ இருக்கனும், அது இல்லைன்னா அவனுக்கு சாப்பாடு உள்ள இறங்காது, நான்வெஜ் சாப்பிடறப்ப கூட கறியை அதிகமா வைக்கனும், அப்பதான் அவன் சாப்பிடுவான் மறக்காம அப்பளம் பொறிச்சிடு, ரசத்தை மறந்துடாத, அப்புறம் தயிர் ஊறுகாய் இவ்வளவையும் செய்துடு” என சொல்ல ஜானகி மிரண்டாள்.

  

மஹதியோ

  

”ஆமா என்ன இவ்ளோ பெரிய லிஸ்ட் சொல்றீங்க ஒருவேளைக்கு சமைக்கறதுக்கா இவ்வளவு டிஷ் செய்யனும்”

  

”ஒரு வேளைக்கா இதுதான் 3 வேளைக்கும் செய்யனும், காலையில டிபனுக்கு இட்லி தோசை பூரி, அம்மில அரைச்ச சட்னி இல்லைன்னா சாம்பார், கண்டிப்பா சாதம் இருக்கனும், ஏன்னா அவன் டிபன் சாப்பிட்டு கொஞ்சம் சாதம் சாப்பிடுவான், அப்ப ரசம், குழம்பு, பொறியல், அப்பளம் இருக்கனும், மதியத்துக்கு சாப்பாடு குழம்பு பொறியல் அப்பளம் இருக்கனும், நைட்டு சப்பாத்திதான், ஏன்னா எங்க ரெண்டு பேருக்கும் ஷுகர் இருக்கு, அவனும் லிமிட்டாதான் சாப்பிடுவான் அப்பதானே நல்லா தூங்க முடியும், அதனால சப்பாத்தி அதுக்கு மட்டும் சிக்கன் கிரேவியோ இல்லை மட்டன் சுக்காவோ முடிஞ்சா முட்டை குழம்பு வைச்சா கூட அவன் ரசிச்சி ருசிச்சி சாப்பிடுவான்” என சொல்ல ஜானகி அதிர்ச்சியில் அலறினாள்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.