(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”என்னது மாமா ராத்திரியில சப்பாத்திதான் சாப்பிடுவாரா, அது தெரியாம நான் சாதம் வைச்சிட்டேனே”

  

”உனனை யார் வைக்கச் சொன்னது என்னை கேட்டுத்தானே செய்யனும்” என பரிமளா சொல்ல ஜானகி என்ன செய்வது என தெரியாமல் தவித்தாள், அதைக்கண்ட மஹதியோ பரிமளாவிடம்

  

”என்னம்மா இது ஒரே வீட்ல 3 பேர் இருக்கீங்க, ஆனா 3 பேருமே ஒண்ணுபோல ஒத்துமையா சாப்பிட மாட்டீங்களா”

  

”நாங்க அப்படியே பழகிட்டோம் இதுல என்ன தப்பிருக்கு, பணம் இருக்கு விதவிதமா சாப்பிடாம வேற எப்படி சாப்பிடறது” என சொல்ல மஹதியோ

  

”நல்லவேளை நான் இந்த வீட்டுக்கு சின்ன மருமகளா வந்துட்டேன், இங்க எல்லாருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு செய்தா போதும், எனக்கு நிம்மதி” என வெளிப்படையாக சொன்னவள் மங்களத்திடம்

  

”அத்தை நான் சொன்னது சரிதானே இல்லை விதவிதமா சமைக்கனுமா”

  

”சே சே அப்படியெல்லாம் இல்லை, வெறும் சாதம் ரசம் வைச்சா கூட நாங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவோம், விதவிதமா செய்யனும்னு அவசியம் இல்லை, உனக்கு என்ன வருமோ அதை செய், கஷ்டப்பட்டு அது இதுன்னு நிறைய செய்ய வேணாம் சரியா“

  

”சரிங்கத்தை அப்ப நாளையில இருந்து நம்ம குடும்பத்துக்கு நானே சமைக்கிறேன்”

  

”சரிம்மா அப்படியே செய், நான் உனக்கு உதவி செய்றேன்”

  

”சரிங்கத்தை எப்படியோ நீங்களே சமைச்சதால சாமான் கழுவற வேலையை நான் செய்யவா”

  

”எதுக்கு அதான் வேலைகாரி இருக்காளே, இந்த வீட்ல சமையல் நான் செய்தா சாமான் கழுவறது துணி தோய்க்கறது வீட்டை சுத்தம் செய்றதுன்னு எல்லாத்துக்கும் வேலைக்காரங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.