”ஓ எந்த பிரச்சனையும் இல்லை எல்லாமே இங்க சரியாதான் இருக்கு எதுக்காக இங்க வந்தீங்க ஏதாவது தகவல் சொல்லனுமா”
”அதெல்லாம் இல்லை ஒரு மாசம் ஆச்சே ஏதாவது மாற்றம் இருக்கான்னு பார்க்க வந்தேன்”
“செக்கிங் வேலையா”
”அப்படியில்லை சும்மா பார்க்கலாம்னு அவ்ளோதான்” என சொல்லியவன் கண்ணகியிடம்
”பார்த்தியா இங்க எந்த பிரச்சனையும் இல்லை வா போலாம்” என அழைக்க அவளோ அங்கிருந்த மாணவர்களில் இருந்து ஒரு மாணவனை தேர்ந்தெடுத்தாள்
”உன் பையை கொடு” என்றாள் அவனோ திகைத்தான்
”உன் பையை கொடு செக் பண்றேன்” என சொல்ல அந்த மாணவன் தடுமாற கோவலனோ
”கண்ணகி என்ன செய்ற அவனோட பையை எதுக்கு செக் பண்ணனும் அது அவனோட பர்சனல்”
“இது ஒண்ணும் அவனோட பெட்ரூம் கிடையாது இது க்ளாஸ் ரூம் இங்க என்ன பர்சனல் வேண்டியிருக்கு” என சொல்ல அவனோ
”வேணாம் பிரச்சனையை கிளப்பாத” என சொல்லியும் அவள் கேட்காமல் அந்த மாணவனின் பையை திறந்துப் பார்த்தாள் காலியாக இருந்தது
”என்னது பை காலியா இருக்கு நோட்புக் எங்க” என கேட்க அவனோ திருதிருவென விழித்தான்.
அவள் விடவில்லை மற்ற மாணவர்களின் பையை திறந்துப் பார்த்தாள் அனைத்துமே