அவள் மேல விழுந்திருக்கு”
“இதுல கோவலனுக்கும் பங்கு இருக்குமா”
”தெரியலையே அதைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம், முதல்ல கண்ணகியை கூட்டிட்டு வரலாம் வா நீ வந்து பேசினா கொஞ்சமாவது மனம் இறங்கி வருவாங்க” என சொல்ல உடனே ஈஸ்வர மூர்த்தி உதயமூர்த்தியுடன் கிளம்பினார் கண்ணகியை காப்பாற்ற.
இந்த விசயம் மீடியா வரைக்கும் செல்லாமல் பார்த்துக் கொண்டான் கோவலன், அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி வைத்திருந்தான், கண்ணகி கவலையில்லாமல் போலீஸ் லாக்கப்பில் அமர்ந்திருந்தாள், அவளிடம் உண்மையிருந்தது அந்த உண்மை அவளுக்கு தைரியத்தை வரவழைத்தது அவளின் இந்த அசாத்திய தைரியத்தைக்கண்டு கோவலனே வியந்தான்.
அதே நேரம் போலீஸ் ஸ்டேனுக்கு ஈஸ்வர மூர்த்தியும் உதய மூர்த்தியும் வந்திறங்கினார்கள்
”என்னடா நடக்குது இங்க” என கோவலனிடம் கோபமாக கேட்டார் ஈஸ்வர மூர்த்தி
”தெரியலை தாத்தா”
“பொய் சொல்லாத இந்த விசயத்தில உனக்கும் பங்கு இருக்கா என்ன”
”சத்தியமா இல்லை தாத்தா இதுக்கெல்லாம் காரணம் அந்த சிலம்புதான்“
”அவனா நினைச்சேன், அவன் மோசமானவன்னு நான் எத்தனையோ முறை உனக்கு சொன்னேன், நீதான் கேட்காம கூட படிச்சவன் நண்பன் அது இதுன்னு சொல்லி காலேஜ்ல வேலை போட்டுக் கொடுத்த பார்த்தியா, அவனால எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டோம், இப்ப பேர் கெட்டது நம்ம காலேஜ்க்குதானே”
”சாரி தாத்தா”