(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

பிஸ்னஸ்மேன் நரேந்திரனின் மருமகள் என்ற உன்னுடைய இன்றைய நிலைக்கோ எந்த மாற்றமுமில்லை... எனக்கு எப்போதுமே இந்த காதல் கல்யாணம் இதில் எல்லாம் இன்டிரெஸ்ட் இல்லை... வீட்டில நான் கேட்ட உடனே பணம் கொடுத்திருந்தா நீ இந்த பிக்சரில் வர வேண்டிய அவசியமே இல்லாம கூட போயிருந்திருக்கலாம்...”

  

ஆனால், நான் தான் அந்த பணத்தை உங்களுக்கு தர தயாரா இருந்தேனே...”

  

அவனின் பேச்சின் நடுவே குறுக்கிட்டு பேசியவளை, ஒரு பார்வை பார்த்த விவேக், மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டு பேசினான்!

  

அதில ஆயிரம் பிரச்சனை வரும். நீ சொன்னாலும் பார்த்திபனோட அப்பா ஒத்துக்கனும், ஏன் இங்கே வீட்டில அப்பாவும் அம்மாவும் கூட ஏதாவது சொல்லுவாங்க... அதெல்லாம் சரியா செட் ஆகி இருக்காது... இது தான் எனக்கு பெர்ஃபெக்ட்டா வொர்க் அவுட் ஆச்சு...”

  

பட் நான்? இப்போ என்னோட வாழ்க்கை?”

  

அந்த கேள்வியில் ஒலித்த ஏதோ ஒன்று விவேக்கின் மனதை பிசைந்தது... பாரதியை திரும்பி நேராக பார்க்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை... எனவே இப்போதும் பார்வையை ஜன்னல் பக்கமே வைத்து,

  

யூ ஆர் நாட் அப் டூ மை டேஸ்ட் பாரதி! நீ என் கிட்ட நடந்துக் கிட்ட விதத்துக்கு உனக்கு ஒரு பனிஷ்மென்ட் கொடுக்கணும்னு நினைச்சேன்... அதை அச்சீவும் செய்துட்டேன்... ஆனால், அதுக்காக யாருமே இல்லாத உன்னை நடு ரோட்டில எல்லாம் விட்டுட மாட்டேன்... நான் நல்லவனில்லை, அதுக்காக நூறு சதவிகிதம் கெட்டவனும் இல்லை... நீ இங்கேயே இருக்கலாம், அங்கே ஹாஸ்டல்ல இருக்க மாதிரின்னு நினைச்சுக்கோ... அவ்வளவு தான்...” என்றான்!

  

ஆனந்த்...”

  

பாரதியின் அழைப்பு காதில் விழாததுப் போல காட்டிக் கொண்டு, விவேக்கே மேலே பேசினான்...

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.