கோபம் கொண்டு ஒவ்வொரு மரமாக ஏறினான், முதலில் மெதுவாக ஏறினான், ஒரு மரத்தில் ஏறி இறங்கிய பின் அவனுக்கு பயம் விலகியது
அடுத்து சரசரவென மரம் ஏறி இறங்கினான் நன்றாக முத்தின காய்களாக பறித்தான், அவற்றை ட்ராக்டரில் அவனே ஏற்றினான், உதவி செய்ய வந்தவர்களை காவேரியே தடுத்தாள், அவனையே அனைத்து வேலைகளையும் செய்ய வைத்தாள், அவனும் அனைத்து தேங்காய்களையும் ஏற்றிக் கொண்டு மார்கெட் சென்றான்.
அவன் வரவை எதிர்பாராத வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்க அவனோ
”நான் இந்த தேங்காய்களை விக்க வந்தேன்“
”அதுக்கென்ன கொம்பா எனக்கு கொடு நானே மொத்தமா வாங்கிக்கிறேன்”
என ஆளாளுக்கு வர அதில் அவனது தந்தையும் இருந்தார் தன் மகனை ஏற இறங்கப் பார்த்தார். ஒரே நாளில் அவ்வளவு வேலை செய்து சோர்ந்து போய் முகம் வதங்கிப் போய் வந்திருந்தான், மதியம் கூட சாப்பிடவில்லை அவன் முகத்தைக்கண்டதும் அவருக்கு கஷ்டமாகிப் போனது
”கொம்பா” என பாசமாக அழைக்க அவனோ தந்தையைக் கண்டதும் கண்ணீர் மல்க சென்று அணைத்துக் கொண்டான், அந்த அணைப்பை வைத்தே அவர் புரிந்துக் கெண்டார் மகன் எந்தளவு கஷ்டப்படுகிறான் என்று
”உன்னை செல்லம் கொஞ்சி எப்படியெல்லாம் வளர்த்தேன், உன்னை எதுக்குமே நான் வேலை வாங்கினதில்லை, உன்கிட்ட 150 பேர் வேலை செய்தாங்க ஆனா இப்ப ஒரு வேலைக்காரன் போல மாறிட்டியே கொம்பா, உன்னை பார்க்கவே எனக்கு கஷ்டமாயிருக்கு”
“என் நேரம் சரியில்லைப்பா” என சொல்ல அவரோ அவனை விட்டு விலகி நின்று
”என்னடா இது கோலம் என்ன வேலை செய்துட்டு வந்து நிக்கற” என கேட்க அவனும் விவரம் சொன்னான்