(Reading time: 23 - 46 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அடப்பாவி மரம் ஏறி இறங்கினியா, ஒருவேளை தவறி கீழே விழுந்திருந்தா என்னாயிருக்கும் எதுக்குடா உனக்கு இந்த வேண்டாத வேலை” என கேட்க அதற்கு

  

”இல்லைப்பா காவேரி காலையில வீட்டு வரவு செலவு கணக்குகளை பார்த்து சத்தம் போட்டா, என்னை நம்பி வந்த என் நண்பனுக்கும் நான் வளரக்கற நாய்க்கும் அவள் செலவு செய்யமாட்டாளாம் வேணும்னா நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சி செலவு செய்துக்கன்னு சொன்னா அதான் இப்படி”

  

”அதுக்கு அவள்கிட்டயா நீ வேலைக்குப் போகனும், என்கிட்ட வந்திருக்க கூடாதா உனக்குன்னு உட்கார்ந்து செய்ற வேலையை தந்திருப்பேன்ல”

  

”வேணாம்பா ஏற்கனவே அவள் எங்கம்மாவை பேசியே காயப்படுத்திட்டா, அப்ப இருந்து அம்மா என்னை பார்க்க கூட வரலை, அடுத்து உங்களையும் ஒரு வார்த்தை பேசிட்டா என்னால தாங்கவே முடியாதுப்பா”

  

”அதுவும் சரிதான் காவேரி நல்லபொண்ணுதான் ஆனா பாவம் அவளுக்கு நடந்த அவமானத்துக்கு இப்படி மாறிட்டா”

  

”எனக்கும் தெரியும்பா என்ன செய்றது”

  

“சரி இப்ப எதுக்கு இங்க வந்த“

  

”இந்த காய்களை விக்க வந்தேன்”

  

”எவ்ளோ விலைக்கு விக்கனுமாம்”

  

”30 ரூபாய்க்கு”

  

”முப்பதா”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.