(Reading time: 23 - 46 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”சாப்பாடுதானே இந்த வீட்ல இல்லையா இங்க சாப்பிடாம அங்க ஏன் போன“

  

”என்னவோ போனேன், உனக்கென்ன சும்மா பேசிக்கிட்டு இந்தா பணம் ஆளைவிடு”

  

”நில்லு என்ன பணம் அதிகமா இருக்கு எவ்ளோ ரூபாய்க்கு தேங்காயை வித்த”

  

”ஐம்பது ரூபாய்க்கு” என சொன்னதும் அவளே ஆச்சர்யப்பட்டு நின்றாள்

  

”என்னது ஐம்பது ரூபாய்க்கா? இதை நான் நம்பனுமா யார் காதுல பூ சுத்தற, ஓ இந்த பணம் உங்கப்பா தந்ததா அசிங்கமா இல்லை உனக்கு, உன்னால வியாபாரம் கூட செய்ய முடியாதா”

  

”இதப்பாரு இது ஒண்ணும் எங்கப்பா தரலை வேலாயுதம் இருந்தாரு அவர் தந்தாரு”

  

”இதை நான் நம்பனுமா“

  

”போய் அவரையே கேளு”

  

”கேட்கறேன் நீ மட்டும் பொய் சொன்னது தெரிஞ்சது உனக்கு இந்த வீட்லயே இடம் கிடையாது தோப்புலதான் தங்கனும்“

  

”தோப்புல எதுக்கு சுடுகாட்டுல கூட தங்கறேன் போதுமா போடி” என அலட்சியமாக சொல்லிவிட்டு அவன் சென்றுவிட காவேரியின் சந்தேகம் அதிகமானது அப்போதே வேலாயுதம் வீட்டிற்கு சென்றுப் பேசினாள். அவரோ

  

”இதப்பாரும்மா காவேரி உனக்கும் கொம்பனுக்கும் ஓராயிரம் விசயம் இருக்கலாம், ஆனா கொம்பன் எனக்கு பெரிய உதவி செய்திருக்காப்ல, எனக்குன்னு இல்லை இந்த ஊருக்கே நிறைய உதவிகள் செய்திருக்காப்ல, நான் நீன்னு போட்டி போட்டுக்கிட்டு அவன்கிட்ட வியாபாரம் செய்ய எத்தனை பேர் முந்திக்கிட்டு வந்தாங்க தெரியுமா, ஏன் அவங்கப்பா கூட வந்தாப்ல கொம்பன்தான் வேணாம்னு சொல்லிட்டான்.”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.