போறேன்னு சொன்னாரு, ஏன் அதெல்லாம் அவருக்கு புளுத்துப் போச்சி ஆனா இப்ப சந்நியாசி ஆகப்போறேன்னு ஒருநாளாவது சொன்னாரா பார்த்தீங்களா”
”ஆமாம்மா சொல்லலை”
”அதேதான் அவருக்கு வாழ்க்கைன்னா என்ன குடும்பம்னா என்ன செலவுகள்னா என்ன பணத்தேவைன்னா என்னன்னு புரிய வைக்கிறேன், ஊர் மக்களுக்கு ஓராயிரம் உதவிகள் செய்றது அப்புறம் ஊர் அவருக்கு என்ன செய்தது அதுதான் முக்கியம், இப்ப பாருங்க ஊர் அவருக்கு எவ்ளோ துணையா நிக்குதுன்னு இதுதான் எனக்குத் தேவை, அப்பா நாளைக்கு எல்லா பிரச்சனையும் மாறி நான் அவர்கூட வாழறப்ப அவர் சந்நியாசியாகனும்னு ஆசைப்படக்கூடாதுப்பா, அதுக்காக சுயநலவாதியாவும் இருக்க கூடாது, பொறுப்பான குடும்பஸ்தனா இருக்கனும், அதுக்காகதான் நான் அவரை தயார்படுத்தறேன், அதை நீங்க கொடுமைபடுத்தறேன்னு நினைக்கறீங்க
இவரை விட்டா அவர் வீட்ல இருந்த மாதிரி பொறுப்பில்லாம இருப்பாரு, அவருக்கு குடும்பத்து மேல அக்கறையும் இருக்காது, பாசமும் இருக்காது, இப்படி கொம்பன் இருக்கனும்னு ஆசைப்படறீங்களா இல்லை பொறுப்பா குடும்பஸ்தனா இருக்கற கொம்பன் வேணுமா, நான் செய்றது எல்லாருக்கும் தப்பாவே இருக்கலாம், அதுக்காக நான் கவலைப்படலை நான் செய்றது சரின்னு என் மனசாட்சிக்கு தெரியும், போக போக கொம்பனும் இந்த ஊரும்கூட என்னை புரிஞ்சிக்கும், யார் என்னைப்பத்தி என்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை, என்னோட கடமையை நான் செய்றேன்” என சொல்ல சண்முகமே அசந்துவிட்டார்.
அவளின் பேச்சை மறந்து இருந்து கேட்ட கொம்பனுக்கும் கணக்குபிள்ளைக்கும் கூட அவளின் முந்தைய செயல் அப்போதுதான் புரிந்தது, அதுவரை ராட்சஸி போல தெரிந்த காவேரி அவனுக்கு மனைவியாக தெரிந்தாள், கணக்குபிள்ளைக்கும் உண்மை உரைத்தது காவேரியை தவறாக நினைத்தது தன் தவறு என உணர்ந்தான்.
சண்முகமும் தன் தவறை உணர்ந்தார். கணக்குபிள்ளையும் காவேரி பேசியதை கொம்பனின் பெற்றோரிடம் சொல்ல அவர்கள் மனம் மகிழ்ந்தார்கள், ஒரே மகன் என பொறுப்பில்லாமல் வளர்த்து அவன் சந்நியாசி ஆக விரும்பும் வரை அவர்களால் தடுக்க