”சரி”
”சரியா பரவாயில்லையா, ஆமா நீ உங்கப்பாகிட்டயே வேலைக்குப் போலாமே அவர்னா உன்னை பூமாதிரி பார்த்துக்குவார்ல”
”வேணாம்மா ஏற்கனவே நீ எங்கம்மாவை ரொம்ப பேசிட்ட, அடுத்து எங்கப்பாவா அவர் இந்த ஊர்ல தலைநிமிர்ந்து வாழறாரு, என்னால அவர் தலைகுனியக்கூடாது”
”என்னவோ தினம் தினம் உன்னை எப்படியெல்லாம் பழிவாங்கலாம் கஷ்டப்படுத்தலாம்னு யோசிச்சே என் நாள் ஓடுது, இனி அதுக்கு அவசியம் இல்லை, நீ என்கிட்ட வேலை செய்யப் போறல்ல அதுவே உனக்கு ஒரு பெரிய நரகம்தான், இனி நான் நிம்மதியா இருப்பேன்” என சொல்ல கொம்பனோ துக்கப் பெருமூச்சு விட்டான்.
”சரி சரி வா சாப்பிட்டு கிளம்பலாம் நேரமாகுது” என சொல்ல அவனும் சரியென்றான்.
இருவரும் சாப்பிட்டு கிளம்பிச் சென்றார்கள், கணக்குபிள்ளைக்கு மனம் கனத்தது, சண்முகத்திற்கு மகளின் போக்கு வெறுப்பையே தந்தது, ஆனாலும் மகளை கண்டிக்க இயலவில்லை ஏதாவது சொன்னால் தான் பட்ட அவமானத்தையே சொல்லி வாயடைத்துவிடுவதால் அவர் இப்போதெல்லாம் எது நடந்தாலும் மௌனமாகிப் போனார்.
தோப்புக்கு வந்ததும் காவேரி வேண்டுமென்றே அங்கிருக்கும் அனைவரும் கேட்கும்படி கொம்பனை அதட்டினாள்
”ஏய் கொம்பா என்ன மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்க, இங்க ஒண்ணும் நீ முதலாளியா வரலை இங்க வேலை செய்ய வந்திருக்க, சும்மா நிக்காம மடமடன்னு வேலையில இறங்கு” என அதட்ட அங்கிருந்தவர்கள் அதிர்ந்தார்கள், யாருமே வேலை செய்ய வில்லை கொம்பனின் நிலைமையை நினைத்து பரிதாபப்ட்டார்கள்.
”என்ன வேலை செய்யனும் சின்னம்மா” என பவ்யமாக கொம்பன் கேட்க அவளோ